ஈரோட்டில் பல்நோக்கு மருத்துவமனை அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

ஈரோட்டில் பல்நோக்கு மருத்துவமனை அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி ஆய்வு

ஈரோடு,செப்.30- ஈரோடு அரசு மருத்துவமனை வளாக பகுதியில் ரூ. 64 கோடி மதிப்பில் 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி ஆகியோர் நேற்று (29.9.2022) பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஈரோடு அரசு மருத்துவமனையில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு ரூ. 64 கோடி மதிப்பில் 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வருகிற டிசம்பர் மாதம் இறுதிக்குள் இந்த பணிகள் நிறைவடையும்.

இதில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, அறுவை மற்றும் எலும்பு தொடர்பான சிகிச்சை பிரிவு, நரம்பியல் சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு சிறப்பு பிரிவுகள் செயல்பட உள்ளது. கட்டடம் தரமான முறையில் கட்டப்பட்டு வருகிறது. மருத்துவமனை முன்பு மேம்பாலம் செல்வதால் மாற்றுப்பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். அவ்வாறு அங்கு சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என்றால் அரசு மருத்துவமனையில் 3. 30 மீட்டர் அகலம் இடம் தேவைப்படு கிறது. இதில் சுகாதாரம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆகிய 2 துறை கள் சம்பந்தப்பட்டுள்ளதால் சம்பந் தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப் படும். 

-இவ்வாறு அவர் கூறினார். 

ஆய்வின்போது மாவட்ட ஆட் சியர் கிருஷ்ணனுண்ணி, தமிழ்நாடு அரசு கேபிள் டி. வி. நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார், சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஜி. வெங்கடாசலம், மாநகராட்சி மேயர் நாகரத்தினம் உள்பட பலர் உடன் இருந்தனர்.


No comments:

Post a Comment