கடத்தப்பட்ட 'கடவுளர்கள்' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 9, 2022

கடத்தப்பட்ட 'கடவுளர்கள்'

சென்னை,செப்.9- கும்பகோணம் கோயிலில் இருந்து 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன 4 சிலைகள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித் துள்ளனர். அந்தச் சிலைகளை மீட் கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் அருகே உள்ள சுந்தரப்பெருமாள் கோவில் கிராமத்தில் சவுந்தரராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் செயல் அலுவலராக உள்ள ராஜா என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு, சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையில் புகார் மனு ஒன்று அளித்தார்.

அதில், சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலையை 1957 முதல் 1967ஆம் ஆண் டுக்கு இடைப்பட்ட காலத்தில்,  சிலர் திருடிச் சென்று விட்டதாகவும், சிலை இருந்த இடத்தில் போலி சிலையை வைத்துவிட்டதாகவும் கூறப்பட்டி ருந்தது. இந்த புகாரின் பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். விசா ரணை நடத்த டிஎஸ்பி. டி.பி.சந்திர சேகரன் நியமிக்கப்பட்டார்.

போலி சிலைகள்

அவர் நடத்திய விசாரணையில், 60 முதல் 65 ஆண்டுகளுக்கு முன்பு சில   நபர்கள், திருமங்கை ஆழ்வார் சிலையை திருடிவிட்டு, பக்தர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க போலி சிலையை வைத்திருந்தது தெரிய வந்தது. இந்தக் கோயிலில் திருடு போன சிலையின் உருவப்படம், புதுச்சேரியில் உள்ள இந்தோ-பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் மூலம் பெறப்பட்டு, போலி சிலை யுடன் ஒப்பிடப்பட்டது.

அப்போது, கோயிலில் உள்ள சிலை போலியானது என்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து, திருடுபோன திருமங்கை ஆழ்வார் சிலை வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகத்தில் இருக் கிறதா? என்பது குறித்து ஆராயப்பட்டது.

லண்டன் அருங்காட்சியகம்

இந்நிலையில், லண்டனில் உள்ள அஷ்மோலியன் அருங்காட்சியகத் தில் திருடுபோன சிலை இருப்பது தெரிய வந்தது. அந்தச் சிலையை 1967ஆம் ஆண்டு ஜே.ஆர்.பெல் மாண்ட் என்ற சிலை சேகரிப்பாள ரிடம் இருந்து 850 டாலர் பணம் கொடுத்து, அந்த அருங் காட்சியகம் ஏலத்தில் எடுத்துள்ளது. எனவே, திருமங்கை ஆழ்வார் சிலை திருடு போனதற்கான ஆதாரத்தைக் காண்பித்து, அந்த சிலையை மீட்டுக் கொண்டுவரும் நடவடிக்கையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கும்பகோணம் கோயிலில் திருடுபோனது ஒரு கடவுளர் சிலை மட்டும்தானா? அல்லது வேறு  கடவுளர்களின் சிலைகளும் அப் போது திருடப்பட்டுள்ளதா? என் பது குறித்தும் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் ஆராய்ந் தனர். 

அதில், அவர்களுக்கு மேலும் அதிர்ச் சியான தகவல் கிடைத்தது. அதாவது, சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் சிலை திருடப்பட்டபோதே, காளிங்கனார்த் தன கிருஷ்ணன், விஷ்ணு, சிறீதேவி ஆகிய மேலும் 3 கடவுளர் சிலைகளும் திருடப்பட்டு, அதற்கு பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டது கண்டுபிடிக் கப்பட் டது.

எனவே, அந்தச் சிலைகள் குறித்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் தேடியபோது, அமெ ரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஆசிய கலை அருங் காட்சியகத்தில் காளிங்கனார்த்தன கிருஷ்ணன் சிலையும், டெக்சாசில் உள்ள கிம்பெல் கலை அருங் காட்சியகத்தில் விஷ்ணு சிலையும், புளோரிடாவில் உள்ள ஹில்ஸ் ஏல தொகுப்பு மய்யத்தில் சிறீதேவி சிலையும் இருப்பது தெரிய வந்தது. எனவே, அந்தச் சிலைகளையும் மீட்க காவல்துறையினர் தீவிர நட வடிக்கை எடுத்து வருகின்றனர்.


No comments:

Post a Comment