கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் மீன் பிடித் தொழில் ஊர்களான ஜெகதாப்பட்டினம், மல்லிப்பட்டினம், கோட்டைப்பட்டினம் போன்ற பகுதி களைச் சேர்ந்த மீனவச் சகோதரர்கள் 19.9.2022 அன்று வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப் பட்டுள்ளனர்.
அவர்களது மீன் வலைகளை அறுத்து, அராஜகம் செய்து, அந்நாட்டு நீதிமன்ற ஆணையின்படி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடுமை - தொடர் அநீதி நடவடிக்கை என்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மாநில அரசும், ஒன்றிய அரசும் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணுவது மிகவும் அவசியம். கைது செய்யப்பட்ட மீனவத் தோழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
20.9.2022
சென்னை
No comments:
Post a Comment