சென்னை,செப்.12- விழாக் கால நாட்களில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பு தொடங்கப்படும். அவ்வாறு பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பயணச்சீட்டு விற்று தீர்ந்து விடும். அந்தவகையில் வருகிற பொங்கல் திருநாளை முன்னிட்டு ரயிலில் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. பொதுமக்கள் அய்.அர்.சி.டி.சி இணையதளம் வழியாகவோ அல்லது ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மய்யங் களிலிலோ ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி 12-ஆம் தேதி பயணிக்க இன்று (திங்கட்கிழமை) முன்பதிவு செய்யலாம். ஜனவரி
13-ஆம் தேதி பயணிக்க நாளை(செவ்வாய்கிழமை) முன்பதிவு செய்யலாம், ஜனவரி 14-ஆம் தேதி பயணம் செய்ய வருகிற 14ஆம் தேதி முன்பதிவு செய்யலாம், பொங்கல் தினமான ஜனவரி 15-ஆம் தேதி பயணம் செய்ய வருகிற 15ஆம் தேதி முன்பதிவு செய்யலாம். ஜனவரி 16-ஆம் தேதி பயணம் செய்ய வருகிற 16-ஆம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment