பெங்களூரு, செப். 24- கருநாடக மாநிலம் பெங்களூருவில் தமிழ்ச்சங்க அரங்கில் திராவிடர் அகம் பெரியார் மய்யம், ஆசிரி யர் அரங்கில் 18.9.2022 ஞாயிறு காலை 10.30 மணிக்கு அறிவாசான் தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள், அறிஞர் அண்ணா 114 ஆவது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
கருநாடக மாநில திராவிடர் கழகத் தலை வர் மு. சானகிராமன் நிகழ்ச்சிக்கு தலைமை யேற்று உரை நிகழ்த்தி னார். அனைவரையும் செயலாளர் இரா. முல் லைக்கோ வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தார்.
இராணுவ கர்னல் ஆரோக்கியசாமி கழக கொடியை ஏற்றி வைத் தார். தலைவர் மு சானகி ராமன் புதிய வரவிற்கு அறிமுகப்படுத்தி பய னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
தந்தை பெரியார் படத்தினை நாடக செம் மல், மாநில துணைத் தலைவர் வீ.மு. வேலு திறந்து வைத்து உரை நிகழ்த்தினார்.
வடக்கு மண்டல தலைவர் இள. பழனிவேல் அண்ணாவின் படத் தினை திறந்து வைத்து, உரை நிகழ்த்தினர். பெரியார், அண்ணாவின் உருவப் படங்கள் மலர் மாலைகளாலும் அலங் கார மின் விளக்குகளா லும் அலங்கரித்து வைக் கப்பட்டிருந்தன.
தங்க வயல் கிளை தலைவர் வி. கிருபாநிதி, பெங்களூரு கு. ஆனந்தன், சிராம்புரம், எம்ஆர். பழம்நீ, பொதுக்குழு உறுப்பினர் நல்லாசிரியர் இரா. இராசாராம், அல் சூர் க. தங்கசாமி, இத ழாளர் தினகரன், சிந்தை யாளர் ஆ. இராசன், உரை நிகழ்த்தினர்.
மூத்த இதழாளர் முத்துமணி நன்னன் நெடிய உரை நிகழ்த் தினார்.
கழக வழக்குரைஞர் பிரிவு தலைவர் சே. குணவேந்தன் பெரியார் பற்றிய நெடிய பாடலை பாடி அனைவரின் மகிழ்ச்சியுடன் கையொலியை பெற்றார்.
பெரியார் பிஞ்சு அறி வழகன் ஆனந்தனுக்கு பிறந்தநாள் தலைவரால் பயனாடை அணிவித்து சிறப்பித்தார்கள்.
நிறைவாக தென் மண்டல செயலாளர், பொதுவுடைமை பாவலர் கி.சு. இளங்கோவன் பெரியார் அண்ணா அவர்களின் சிறப்புகளை சுவைபட நெடிய நேரம் பேசி சிறப்பித்தார்.
தோழியர் சத்தியவாணி, மலர்விழி, தமிழ்ச்சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண் டனர்.
நிறைவாக வழக்கு ரைஞர் சே. குணவேந்தன் அனைவருக்கும் நன்றி யுரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment