ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து அசோக் கெலாட் விலகல்.

* சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான முறையில் திருமணம் ஆகாத பெண்களும் கருக்கலைக்க அனுமதி உண்டு: உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அயோத்தியில் அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்கள் மதிய உணவில் உப்பு சேர்த்து சோறு பரிமாறப்பட்டது. தலைமை ஆசிரியர் இடைநீக்கம், கிராம தலைவருக்கு தாக்கீது அனுப்பப்பட்டு, விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

* தனியார், சிறுபான்மை மருத்துவக் கல்லூரி இடங்களில் மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு. மீதமுள்ள 15 சதவீத இடங்கள் மட்டுமே வெளி மாநிலத் தவர்க்கு வாய்ப்பு - தெலுங்கானா அரசு உத்தரவு.

டெலிகிராப்:

சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு; ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment