செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 21, 2022

செய்தியும், சிந்தனையும்....!

எதிர்ப்பைக் காணோமே...

* திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரு கோடி ரூபாயில் இஸ்லாமிய இணையினர் காணிக்கை.

>> ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்களின் எதிர்ப்பைக் காணோமே!

கல்வியில் என்ன தேசியம்?

* தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதற்கு தமிழ் நாடு அரசுக்கு முறையான காரணம் ஏதும் இல்லை.

- ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

>> மாநிலக் கல்விக்கு மாறானது - தேசிய கல்விக் கொள்கை என்ற ஒரு காரணம் போதாதா?

கடவுளா - கல்லா?

* தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தப் பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை.

>> அவை கடவுள்கள் அல்ல; வெறும் சிலைகள்தான் என்று இப்பொழுதாவது ஒப்புக்கொண்டார்களே!

No comments:

Post a Comment