சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதியை தடை செய்க! ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 10, 2022

சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதியை தடை செய்க! ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை,செப்.10- “தமிழ்நாட் டில் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில், சுற்றுச்சூழ லுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்” என்று ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: 

“தீப்பெட்டி உற்பத்தி தொழில் தமிழ்நாட் டின்தென்பகுதியில் வேலை வாய்ப்பிற்கான முக்கிய ஆதார மாக விளங்குவதுடன், அப்பகுதி யில் ஒரு பாரம்பரியத் தொழி லாகவும் உள்ளது. இத்தொழிலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வர்கள் நேரடியாக வேலை வாய்ப்பைப் பெறு கின்றனர். அப்பணியாளர்களில் பெரும் பாலோர் பெண்களாவர். மேலும், விவசாயம் செய்ய இயலாத வறண்ட பகுதியில் பொருளாதார வளர்ச்சியின் ஆதாரமாக இத்தொழில் விளங் குகிறது. தீப் பெட்டி ஏற்றுமதி மூலம் சுமார் ரூ.400 கோடி வெளிநாட்டுச் செலாவணி வரு வாய் ஈட்டப் படுகிறது.

தற்போது தொழில் துறை மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில், ஏற்றுமதிச் சந்தையில் பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவில் இருந்து கடுமையான போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், கோவிட் பெருந்தொற் றினைத் தொடர்ந்து ஏற்பட்ட விநியோகச் சங்கிலி இடை யூறுகள், ஏற்றுமதி தொடர் புடைய செலவீனம் மற்றும் நடைமுறை சிரமங்கள் மேலும் அதிகரித்துள்ளது, உள்ளீட்டுச் செலவுகளும் பெருமளவு அதி கரித்துள்ளது.

மேலும், சீனா போன்ற நாடு களில் இருந்து சட்டப்படியாகவும் சட்டவிரோதமாகவும் இறக்கு மதி செய்யப்படும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் களின் வரவால் தீப்பெட்டித் தொழிலின் உள்நாட்டு சந்தை வாய்ப்பு வேகமாக குறைந்து வருகிறது.

இந்த சிகரெட் லைட்டர்கள் ரூ.10-க்கு கிடைப்பது 20 தீப் பெட்டிகளுக்கு மாற்றாக இருக் கும். இருப்பினும் அவை சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப் படுவதுடன், அதில் பயன்படுத்தும் எரிபொருளின் சுகாதார தாக்கம் இன்னும் அறியப்படவில்லை. இவ்வெளிநாட்டு சிகரெட் லைட் டர்கள் தொடர்ந்து சந்தையைக் கைப்பற்றினால், தீப்பெட்டி உற் பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழ்நாட்டில் உள்ள ஒரு லட்சத் துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்.

எனவே, இந்த விஷயத்தில் ஒன்றிய அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களின் இறக்கு மதியை தடை செய்யுமாறும், சட்டவிரோத இறக்குமதிகளுக்கு எதிராக கடுமையான நடவ டிக்கை எடுக்குமாறும் வலியுறுத் துகிறேன்'' என்று தனது கடிதத் தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment