போபால், செப்.1 மத்தியப் பிரதேசம் ஷில்புரி மாவட்டத் தின் ரன்னோட் பகுதியில் உள்ள கரைஹ் கிராமத்தில் போர் ராணி அவந்திபாய் லோதியின் பிறந்த நாளைக் குறிக்கும் மாணவர்களின் விழாவில் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பாஜக தலைவர் பிரீதம் சிங் லோதி 17.8.2022 அன்று உரையாற்றியபோது,
“பார்ப்பனர்கள் மதச் சடங்குகள் மற்றும் பிரார்த் தனைகள் என்ற பெயரில் மக்களை முட்டாளாக்கி, சாமானி யர்களிடம் இருந்து பணம் மற்றும் பிற பொருட்களை பிடுங்கினர். அவர்கள் (பார்ப்பனர்கள்) நமது பணத்திலும் வளத்திலும் செழித்து வருகிறார்கள். நல்ல குடும்பத்தைச் சேர்ந்த அழகான பெண்களைப் பார்த்து, அவர்கள் (பார்ப்பனர்கள்) இந்தப் பெண்களின் வீட்டில் உணவு சாப்பிட விரும்புகிறார்கள். இளம் பெண்களை முன் வரி சையில் உட்கார வைத்து, வயதான பெண்களை பின் பக்கத்தில் உட்கார வைக்க விரும்புகிறார்கள்.” என கடுமையாக பார்ப்பனர்களை சாடினார்,
பாஜகவின் இளைஞர் பிரிவின் பார்ப்பனத் தலைவரான பிரவீன் மிஸ்ரா, லோதிக்கு எதிராக ரானோட் என்ற இடத்தில் வழக்கு பதிவு செய்தார்.
ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள கரைஹ் கிராமத்தில் மாணவர்கள் விழாவில் பேசிய லோதி பார்ப்பன சமூகத் திற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதை யடுத்து, பாஜக லோதியை கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கியது.
பார்ப்பன சமூகத்திற்கு எதிரான கருத்துகளுக்காக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, மத்தியப் பிரதேசத்தின் சம்பல் பகுதியைச் சேர்ந்த ஓபிசி தலைவர் பிரீதம் சிங் லோதி, ஷிவ்புரி மாவட்டத்தின் பிச்சோர் தொகுதியில் 7,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட "பலம் காட்டும்" பேரணியை நடத்தினார்.
பாஜக தலைவர் உமாபாரதி ஆதரவு:
அடுத்த நாள், மேனாள் ஒன்றிய அமைச்சர் உமா பாரதியின் உறவினரான லோதியும் குவாலியரில் உள்ள மாநில ஓபிசி அமைப்புகளின் குடை அமைப்பான ஓபிசி மகாசபையில் சேர்ந்தார்.
ஓபிசிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை கோருவதற்கும், அதற்கேற்ப அவர்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க அழுத்தம் கொடுப்பதற்கும், ஆகஸ்ட் 28 அன்று பிச்சூரில் மற்றொரு பேரணிக்கு லோதி அழைப்பு விடுத் தார். மாநிலத்தின் மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக OBC கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பிச்சோர் பேரணிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, குவாலியரில் பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை லோதி சந்தித்தார், அவர் அவருக்கு ஆதரவு வழங்கினார். காவிக்குப் பதிலாக நீல நிற துண்டைக் கழுத்தில் சுற்றிக் கொண்டு, ஆதரவாளர்களுடன் லோதி பிச்சோரை அடைந்த பேரணியில், பல தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஆர்வலர்களும் கலந்து கொண் டனர், பெரும்பாலும் ஜாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இப்பகுதியில் மாற்றத்தை கொண்டு வர ஓபிசி மற்றும் தாழ்த்தப்பட்ட தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களை ஒரு பொதுவான தளத்தில் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை ஆசாத்துடன் விவாதித்ததாக லோதி கூறினார். "யாதவ், குர்ஜார், பாகேல், வாலிகி மற்றும் ஜாதவ் ஆகிய அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்தால், நாளை முதல் மாற்றம் தொடங்கும்," என்று அவர் செய்தியாளர் களிடம் கூறினார், 2023 இன் பிற்பகுதியில் நடைபெற இருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அத்தகைய சமூகக் கூட்டணியை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதாகக் கூறினார்.
பார்ப்பனர்களைப் புறக்கணிக்க
கிராம மக்கள் முடிவு:
இதற்கிடையில், ஆகஸ்ட் 23 அன்று, ஷிவூரியின் கரேரா தாலுகாவில் உள்ள சிட்டிபூர் கிராமத்தில் உள்ள கிராம மக்கள், எந்த பார்ப்பனர்களையும் தங்கள் வீடுகளுக்கு எந்த நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கக்கூடாது என்றும், தீர்மானத்தை மீறுபவர்களுக்கு ரூ.2,100 அபராதம் விதிக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர். அதனுடன் சமூகத்திலிருந்து வெளியேற்றப்படுவர் என்றும் அறிவித்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் பிற பகுதிகளைப் போலவே, பிச்சோரிலும் பெரும்பாலும் ஓபிசிக்கள் வசிக்கின்றனர், இங்கு லோதி சமூகம் சுமார் 45,000 வாக்காளர்களைக் கொண்டுள்ளது. பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் முறையே 30,000 மற்றும் 25,000 வாக்காளர்களைக் கொண்டுள்ளனர், 30,000 வாக்காளர்கள் வைசியர்கள் உள்ளிட்ட உயர் ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் தொகுதியில் உள்ளனர். மீதமுள்ள 95,000 வாக்காளர்களில் குஷ்வாஹா, பாகேல், சாஹூ, ரத்தோட் மற்றும் கடாரியா போன்ற பல்வேறு ஓபிசி துணை ஜாதிகளும் அடங்குவர்.
பா.ஜ.க.வில் இருந்து லோதி நீக்கப்பட்டது, மாநிலத்தில் உயர் ஜாதியினர் வைத்திருக்கும் ஆதிக்கத்துடன் ஓபிசிகளின் அபிலாஷைகளை சமப்படுத்த அக்கட்சி முயற்சித்து வரும் வேளையில் தீயில் எரிபொருளை சேர்த்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டினர்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள கணேஷ்கேடா கிராமத்தில் பார்ப்பன பூஜாரிகள் சமூக புறக்கணிப்பு செய்தி சமூக வலை தளங்களில் பரவியதால் பதற்றம் நிலவியது. சர்பஞ்ச் ராம் பிரகாஷ் லோதி கையெழுத்திட்ட ஒரு கடிதம் சமூக புறக்கணிப்பு விவரங்கள் எழுதப்பட்ட பல்வேறு சமூக ஊடக தளங்களில் சுற்றி வருகிறது.
பெயர் தெரியாத நிலையில், கூட்டத்தில் முன்வைக்கப் பட்ட தீர்மானங்களை கிராமவாசிகளில் ஒருவர் விவரம் பகிர்ந்துள்ளார். ஆகஸ்ட் 23 அன்று மாதா கோவிலில் நடந்த கூட்டத்தில் எஸ்சி மற்றும் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்ததாக அவர் கூறினார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட பாஜக தலைவர் பிரீதம் லோதிக்கு ஆதரவாக இந்த கூட்டத்திற்கு சர்பஞ்ச் அழைப்பு விடுத்திருந்தார்.
No comments:
Post a Comment