சென்னை, செப்.11 சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனமான நவீன்ஸ் - “நவீன்ஸ் கிச்சன் கார்டன்’’ என்ற பசுமை முனைப்புத் திட்டத்தை 9.9.2022 அன்று முதல் தொடங்கி யிருக்கிறது. உயர்தர காய்கறிகளை வீட்டிலேயே சுயமாக உற்பத்தி செய்ய மக்களை ஊக்குவிக்கும் வகையில் 1000க்கும்மேற்பட்ட காய்கறி செடிகளை மக்க ளுக்கு இலவசமாக விநி யோகிக்கும் முயற்சியில் இந்நிறுவனம். ஈடுபட்டுள்ளது.
சென்னை மேடவாக்கத்தில், 'நவீன்ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ் 3.0' என்ற பெயரில் உலகத் தரத்திலான குடியிருப்பு சமூக வளாகம் தொடங்கப் படுவதை ஒட்டி, இந்த முயற்சியை மேற் கொண்டுள்ளது. தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கீரைகள், புதினா,துளசி, அவரை, பீன்ஸ்கள், கத்தரிக்காய் மற்றும் இன்னும் பலவகையான காய்கறிச் செடிகள் இந்தமுனைப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளன. செடிகள் மற்றும் மரங்கள் வளர்ப்பின் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வை மக்கள் மத்தியில் அதி கரிப்பதும், கரிய மிலவாயு வெளியீடுகளை குறைப்பதும் நீடித்த நிலைப் புத்தன்மையை வலுப்படுத்துவதும் இந்த தனித்துவ மான,புதுமையான திட்டத்தின் நோக்கம் என்று இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஆர். குமார் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment