லக்னோ, செப். 1- உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜில் உள்ள தாராகஞ்ச் என் னும் பகுதியில் இருக் கும் நாகவாசுகி கோயில் அருகில் சிலர் கங்கை நதியில் படகில் பயணம் செய்துள்ள னர். அப்போது அவர் கள் படகில் கோழிக் கறியை சமைத்ததோடு ஹூக்கா எனப்படும் பைப் மூலம் புகைபிடித்துக் கொண்டுமிருந்தனர்.
இது தொடர்பான காட்சிப்பதிவை அவர்கள் இணையத்தில் பதிவேற்றிய நிலையில், அது வைரலாகியுள்ளது. இதைப் பார்த்த பலரும், புனிதமான கங்கை நதியில் இதுபோன்ற செயலை செய்ததற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த காட்சிப்பதிவு வைரலானதைத் தொடர்ந்து அவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ‘புனித’ (?) நதியான கங்கையில் கோழிக்கறியை சமைத்ததால் அவர் கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி சைலேஷ் குமார், "கங்கை ஆற்றில் படகில் கோழிக்கறி சமைத்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள்மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்" என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment