‘‘2024 நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தமிழ் நாட்டில் சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல'' என்று தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார்.
இதன்மூலம் என்ன தெரிவிக்கிறார்?
சகல சர்வாதிகாரமும் இவர் சுண்டு விரலுக்குள் பதுங்கி இருக்கிறதோ!
ஜனநாயகமாவது - வெங்காயமாவது என்கிற வெறித் தனம் இவர்களை ஆட்டிப் படைக்கிறதோ!
ஒரு சட்டப்பேரவைத் தேர்தலில்கூட ஜெயிக்க முடியாத பேர்வழிகளுக்குப் பேச்சைப் பாரு!
கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத ஆள் - கோபுரத் தில் ஏறி அந்தர்பல்டி அடிக்கப் போகிறாராம்! எதையாவது உளறிக் கொட்டி, அதை ஏடுகளில் வெளிவரச் செய்து, மேலிடத்திடம் ‘சபாஷ்' பெற்று, முருகனுக்கு அடித்த லாட்டரிபோல, ‘பதவி கிடைக்காதா?' என்று கருதுகிறார் போலும்!
No comments:
Post a Comment