தமிழ்நாடு காங்கிரஸ் நடைப்பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

தமிழ்நாடு காங்கிரஸ் நடைப்பயணம்

சென்னை, செப்.24 இந்திய அரசமைப் புச் சட்டத்தை பாதுகாக்க தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 25-ஆம் தேதி முதல் 3 நாள் நடைப்பயணம் தொடங்க உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய அரசியல் சாசன அமைப்பு களின் மீது கடுமையான தாக்குதல்களை பாஜக தொடுத்து வருகிறது. நீதித் துறை, தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை என அனைத்துத் துறைகளையும் பாஜக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத் துள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, பாதுகாப்பு வழங்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வர்கள், சிறுபான்மையினர், பின்தங்கிய சமுதாயத்தினர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக, உத் தரப்பிரதேச மாநிலத்தில் அடக்குமுறைக்கு ஆளாகி பலர் உயிரிழந் துள்ளனர்.சுதந்திர இந்தியா இதுவரை காணாத வகையில் கடு மையான அடக்குமுறையை மோடி அரசு எதிர்க் கட்சிகளின் மீது ஏவி விட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி, சென்னையிலிருந்து சிறீபெரும்புதூர் வரை 75 கிமீ நடைப்பயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு, ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன், சிறுபான்மை பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு என 8 அமைப்புகள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இந்தப் பயணத்தை நாளை 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை சத்திய மூர்த்தி பவனில் தொடங்கி வைக்கிறேன். இந்த பயணம் 26, 27 ஆகிய தேதி வரை 

3 நாள்கள் நடைபெற உள்ளது.

இந்த நடைப்பயணத்தில் மேனாள் ஒன்றிய அமைச்சர்கள் ப.சிதம்பரம், திக் விஜய் சிங், சல்மான் குர்ஷித், சாய்ராம் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற் கின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment