ஊற்றங்கரை, செப். 29- கடந்த 25.9.2022 ஞாயிற்றுக் கிழமை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊற்றங்கரை யில் விடுதலை வாசகர் வட்டம் நடத்திய தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, மற்றும் புலவர்
மா. நன்னன் நூற்றாண்டு தொடக்க விழாவில் பங் கேற்ற அனைவரையும் கோ.சரவணன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியினை தருமபுரி மண்டல திரா விடர் கழக செயலாளர் பழ.பிரபு ஒருங்கிணைத்தார்.
ஊற்றங்கரை பகுதி யில் விடுதலை சந்தா சேர்ப்பில் அயராது பாடு பட்ட செ.பொன்முடி ஒன்றிய தலைவர், செ.சிவ ராஜ் ஒன்றிய செயலா ளர், சீனி முத்து. ராஜேசன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆகியோ ருக்கு திராவிட கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குண சேகரன் சிறப்பு செய்தார்.
தமிழ் அறிஞர், எழுத் தாளர், பெரியார் பேரு ரையாளர் புலவர் மா.நன் னன் அவர்களின் படத்தை திமுக மாவட்ட துணை செயலாளர் எம்.சந்திரன் திறந்து வைத்து புலவர் மா.நன்னன் பற்றிய அரிய செய்திகளை எடுத்துரைத்தார்.
உயிராயுதம் தந்த பேராயுதம் எனும் தலைப் பில் திராவிடர் கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குண சேக ரன் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் எம்.சந் திரன் அரையாண்டு விடு தலை சந்தா வழங்கினார்.
ஓய்வு பெற்ற அரசு அலுவலர் ராமசாமி தி மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழுக்கு சந்தா வழங் கினார்.
மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி அரையாண்டு விடுதலை சந்தா வழங் கினார்.
இறுதியாக தா.சிவ குமார் (ஒன்றிய இளை ஞர் அணி செயலாளர் திராவிடர் கழகம்) விழா வில் பங்கேற்ற அனைவ ருக்கும் நன்றியுரை கூறினார்.
No comments:
Post a Comment