ஜெனீவா, செப்.11- உலக அள வில் மனஅழுத்தம், கவலை, கோபம் ஆகியவை தற் போது உச்சத்தில் இருப்ப தாக அய்.நா. ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதில் கரோனா கால அச்சம் முக்கியப் பங்கு வகிப்பதா கவும் தெரிவிக்கப்பட்டுள் ளது.
அய்.நா.-வின் மனித வள மேம்பாடுக்கான விரிவான ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதில் கடந்த 10 ஆண்டு களில் உலக அளவில் மக்களிடம் மனஅழுத்தம், கோபம், கவலை ஆகி யவை அதிகரித்து வந்தி ருப்பதாகவும், அது தற் போது உச்ச அளவில் இருப்பதாகவும் அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள் ளது.ஆனால் நாடுகளின் நிதிநிலை ஒதுக்கீட்டில் சுகாதாரத்திற்கான தொகையில் 2 சதவிகி தத்திற்கு குறைவாகவே மனநல சிகிச்சைக்கு ஒதுக் கப்படுவதாக அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
மேலும் நிச்சயமற்ற நிலை, சமத்துவம் இன்மை, பாதுகாப்பற்ற உணர்வு ஆகியவற்றால் நம்பிக்கையிழப்பு அதிகரித்து மனஅழுத்தப் பிரச்சினைகளை சந்திப் பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அய்.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக கரோனா காலத்தில் நிலவிய பொது முடக்கம், வேலையிழப்பு, உடல்நலக் குறைவு அச் சம் ஆகியவையே பெரும் பங்கு வகிப்பதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment