பூவை ‘இராமசாமி அண்ணன்' உடல்நிலை விசாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 10, 2022

பூவை ‘இராமசாமி அண்ணன்' உடல்நிலை விசாரிப்பு

தஞ்சை, செப். 10- தஞ்சை மாவட்டம் பூவத்தூர் புது நகரை சேர்ந்த பூவை இராமசாமி அண்ணன் என்று எல்லோராலும் அன்போடு அழைக்க கூடிய, பூவை இராமசாமி இளம் வயது முதற்கொண்டு தந்தை பெரியாரின் கொள்கை ஏற்று எவ்வித  ஆசாபாசங்களுக்கும்  ஆட் படாமல்  எந்த நிலையி லும் எதற்கும் சமரசம் கொள்ளாமல் தலைமைத் துவத்தின் வழியில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் தலைமையேற்று பேரன்பை பெற்று  ஒரத்த நாடு விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கப் பணிகளில் ஈடுபட்டு பெருமளவில் விடுதலை சந்தாக்கள் சேர்க்கும் போராளியாக வீர நடை போட்டுக் கொண் டிருக்கும் பூவை இராம சாமி இதய வலி ஏற்பட்டு தஞ்சை மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் செய்து இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் நிலையில், 8.9.2022 அன்று பகல் 12.30 மணி அளவில்  இல்லத்தில் நேரில் சந்தித்து கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா, ஜெயக்குமார் மாவட்ட செயலாளர் அ அருணகிரி, மாவட்டத் துணைச் செயலாளர் அ.உ த்திராபதிஆகியோர் உடல்நிலை குறித்து விசாரித் தனர்.


No comments:

Post a Comment