புதுடில்லி,செப்.10- இனி வரும் நாட்களில் பெரிய மற்றும் சிறிய அளவிலான உணவ கங்கள் தங்களது 'மெனு கார்டில்' இடம் பெற் றுள்ள உணவு வகைகளு டன் அவற்றின் கலோரி யையும் கட்டாயம் குறிப் பிட வேண்டும். இந்திய உணவுப் பாதுகாப்பு மற் றும் தர நிர்ணய ஆணை யத்தின் (FSSAI) விதி முறைகளுக்கு உட்பட்டு இது நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. இதன்மூலம் இனி உண வுப் பிரியர்கள் தங்களது ஆர்டரில் உள்ள பர்கர், பீட்சா, பட்டர் சிக்கன் என அதன் சர்விங் அள வைப் பொறுத்து, அவற் றின் கலோரி விவரத்தை மெனு கார்டு மூலம் அறிந்து கொள்ளலாம். இது kcal என குறிப்பி டப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.
உணவுப் பொருட் க ளில் உள்ள கலோரி அள வுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் இந்த முடிவு அமைந்துள்ளது. இருந்தாலும், இதனை நடைமுறைக்குக் கொண்டு வர உணவகங்கள் கூடுதல் கால அவகாசம் கேட்டி ருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்கா மற்றும் இங் கிலாந்தில் ‘மெனு கார் டில்' கலோரி குறித்த விவ ரங்கள் இடம்பெற்றுள் ளது குறிப்பிடத்தக்கது.
“மக்கள் தாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே இதனை நடைமுறைக்கு கொண்டு வருகிறோம். ஆரோக்கியமே வாழ்வின் வளம். எப்படி நாம் ஆடை அணிகலன்களை வாங்கும்போது அது குறித்து அறிந்துகொண்டு வாங்குகிறோமோ, அது போலத்தான் இதுவும். மக்களின் நல னைக் கருதி இதனைக் கொண்டு வரு கிறோம்.
முதலில் பெரிய உண வகத்தில் இருந்து இத னைத் தொடங்குகிறோம். படிப்படியாக சிறிய உண வகங்களுக்கும் கொண்டு வரப்படும். பெரும்பாலான உணவகங்கள் இதற்கு ஒத்துழைப்பு தந்துள்ளன. சில நிறுவனங்கள் அவ காசம் கேட்டுள்ளன” என உணவுப் பாதுகாப்பு அதிகாரி இனோசி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment