லக்னோ, செப்.21- சமாஜ்வாதி கட்சியினர்- ஆயிரக் கணக்கானோர், உத்தரப் பிரதேச சட்டப் பேரவையை நோக்கி பேரணி நடத்தினர். உ.பி.யில் பெண்களுக்கு எதிரான குறிப்பாக, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான குற்றங்கள் தொடர் அவல மாக மாறிவிட்டன. உன்னாவ், ஹத்ராஸ் என ஏராளமான நிகழ்வுகள் நடந்தும், ஆதித்யநாத் அரசு அலட்சிய மாகவே உள்ளது. இந்த வரிசை யில், கடந்த சில நாட்களுக்கு லக்கீம்பூர் கெரியில், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 2 சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டது டன், அவர்கள் கொன்று தூக்கில் தொங்க விடப்பட்டனர். இந்த படு கொலைச் நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையிலேயே, ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்ட தாகவும், பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதிப் படுத்தக் கோரி, லக்னோ காவல்துறை கண்காணிப்பாளர் அலு வலகத்தில் துவங்கி, ஆளுநர் மாளிகை, காந்தி சிலை வழியாக, சமாஜ்வாதி கட்சியினர் பேரணி நடத்தினர். மேனாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகி லேஷ், அக்கட்சியின் சட்டமன்ற உறுப் பினர்கள் 111 பேர், எம்எல்சி-க்கள் 9 பேர் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்ட ர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். உ.பி. சட்டப் பேரவையின் மழைக் கால கூட்டத்தொடர் திங்களன்று தொடங்கிய நிலையில், சமாஜ்வாதி கட்சியினர், பாஜக அரசுக்கு எதிரான பதாகை களை ஏந்தியபடி பேரவை நோக்கி பேரணியாக சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment