டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*அய்தராபாத் நகரில் பிள்ளையார் சிலை கரைக்கும் விழாவிற்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து 200 சிறார்கள் அழைத்து வரப்பட்டு, வண்ணப்பூச்சு பூசி நாள் முழுவதும் பிச்சை எடுத்திட நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
* பீகார், உ.பி. இணைந்தால், மோடி அரசு வீழும் என்ற வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகள் (உ.பி. + பீகார்= கயி மோடி சர்க்கார்), பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் சந்திப் புக்குப் பின், உ.பி. முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மோடி அரசாங்கம் "விவசாயிகளுக்கு எதிரானது" என்றும், வேலையின்மை பிரச்சினையை கையாள்வதில் "தோல்வியடைந்து விட்டது" என்றும் பவார் குற்றம் சாட்டினார். பில்கிஸ் பானு கூட்டுப் பலாத்கார வழக்கில் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் அவர் பாஜகவை கடுமையாக சாடினார்.
* 2024 ஆம் ஆண்டிற்கான எதிர்க்கட்சி இணைப்பா ளராக தனது பிம்பத்தை வலுப்படுத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்கிறது தலையங்க செய்தி.
தி இந்து:
* மதச்சார்பின்மையும், சோசலிசமும் அரசியல் சாசனத்தில் உள்ளார்ந்தவை மற்றும் அடிப்படையானவை எனக் கூறி, மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் சுப்ர மணியன் சாமியின், "மதச்சார்பற்ற" மற்றும் "சோசலிஸ்ட்" என்பதை அரசமைப்பின் முகப்புரையிலிருந்து நீக்க வேண்டும் என்ற வழக்கிற்கு எதிராக மாநிலங்களவை உறுப்பினர் பினோய் விஸ்வம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்..
.- குடந்தை கருணா
No comments:
Post a Comment