தந்தை, தலைவர், ஆசான்- இந்த மூன்றை யும் ஒட்டுமொத்தமாகப் பெற்று என்னைக் கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகளுக்குத் தலைவ ராக உயர்த்திய இந்த மூன்றும் கலந்த முழு முதல் ஆளுமைத் தலைவர் கலைஞர் அவர்கள்...
“இந்தச் சமுதாய மேன்மைக்காக, எழுச்சிக் காக நான் ஆயுள் இருக்கும் வரை பாடுபடு வேன். அப்படியானால், அதற்குப் பிறகு...? என்ற கேள்விக்குப் பதில்தான். தம்பி ஸ்டாலின் என்பதையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது. என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தலைவராக முன்மொழியக் கூடிய ஒரு வாய்ப்பு எனக்குத் தனிப்பட்ட முறையில் வருமேயானால், அந்த வாய்ப்பை நான் பயன்படுத்தி இப்போது சொல்கிறேன். நான் ஸ்டாலினைத் தான் முன்மொழிவேன் என் றும் தலைவர் கலைஞர் அவர்களின் திரு வாயால் பாராட்டுப் பெற்றேன். இது அரை நூற்றாண்டு காலம், கழகத்துக்காக, தமிழினத்துக்காக உழைத்த உழைப்புக்குப் பின்னால் கிடைத்தது. எனவே, தந்தை, ஒரு மகன் என்ப தற்காக அல்ல; தலைவன், ஒரு தொண்டன், என்பதற்காக அல்ல. ஒரு பேராசான், இவனே நமக்கு முதல் மாணாக்கன் என்பதை பல தேர்வுகளுக்குப் பிறகு, அங்கீகரித்துக் கொடுத்த பட்டயமாக நான் இதைக் கருதுகிறேன். தலைவர் கலைஞர் அவர்கள் கண்ட கனவை காலமெல்லாம் கண் போல் காத்து அதை. கழக உடன்பிறப்புகளின் உறுதுணையோடு நனவாக்கி, அவர் இருக்குமிடம் தேடி ஓடிச் சென்று சமர்ப்பிப்பேன். இதுவே என் வாழ் நாள் இலட்சியம்!
No comments:
Post a Comment