புற்றுநோய் சாத்தியக்கூறுகளை அறிய இலவச மருத்துவ முகாம் மெடிந்தியா மருத்துவமனை ஏற்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 22, 2022

புற்றுநோய் சாத்தியக்கூறுகளை அறிய இலவச மருத்துவ முகாம் மெடிந்தியா மருத்துவமனை ஏற்பாடு

சென்னை, செப். 22- புற்றுநோய் பாதிப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகளை அறிந்து கொள்வதற்கான மருத்து வப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை இலவசமாக வழங்க உள்ளதாக மெடிந்தியா மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜீரண மண்டல சிகிச்சை நிபுணரும், மெடிந்தியா மருத்துவமனையின் தலைவரு மான மருத்துவர் டி.எஸ்.சந்திர சேகர் கூறியதாவது: 

பன்னாட்டு புற்றுநோய் விழிப் புணர்வு தினம் செப்டம்பர் 22-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலக அளவில் அதிக எண்ணிக் கையில் பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் நான்கு வகை யான புற்றுநோய்கள் ஜீரண மண் டலம் சார்ந்தவையாக உள்ளன. வயிறு, பெருங்குடல், உணவுக் குழாய் புற்றுநோய் பாதிப்பு அண் மைக்காலாமாக இந்தியா முழுவ தும் அதிகரித்து வருகிறது. ஆனால், அதுகுறித்து போதிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை .

பற்றுநோய் பாதிப்பு இறுதிநிலையை எட்டிய பிறகு மருத்துவ மனையை நாடும்போது குணப் படுத்துவதற்கான சிகிச்சைகள் அளிக்க இயலுவதில்லை. எனவே, புற்றுநோய் வருவதற்கான சாத் தியக் கூறுகள் நமக்கு இருக்கிறதா என்பதை உறுதி செய்யும் ஆரம்ப நிலை பரிசோதனைகளை அவ் வப்போது செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக புகையிலை, மது பயன்பாடு உள்ளவர்கள் அதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அதைக் கருத்தில் கொண்டே மெடிந்தியா மருத்துவ மனையில் புற்றுநோய்க்கு முந்தைய நிலையை அறிவதற்கான பரிசோத னைகள் இலவசமாக மேற்கொள் ளப்படுகின்றன.

அதைத் தவிர மருத்துவ ஆலோ சனை, உணவு ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படவிருக் கின்றன. எண்டோஸ்கோபி, கொலோனோஸ்கோபி, சிறப்பு ரத்தப் பரிசோதனைகள் தேவைப் படுவோருக்கு ஓராண்டு வரை 20 சதவீத கட்டணச் சலுகை வழங்கப் படும். ஞாயிறு மற்றும் பொதுவிடு முறையைத் தவிர்த்து நாள்தோறும் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை இலவச குருதிப் பரிசோதனை களும், மாலை 3 மணி முதல் 5 மணி வரை இலவச ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படவிருக்கிறது. பொது மக்கள் இதில் பலன்பெற 12789 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையோ அல்லது 044- 283 12345 என்ற எண்ணையோ தொடர்பு கொள் ளலாம் என்றார் அவர். 

No comments:

Post a Comment