காஷ்மீர் மகாராஜா தனது சமஸ் தானத்தில் உள்ள மக்களில் தீண்டாதார் என்பதாக ஒரு பிரிவு இருக்கக் கூடா தென்றும், அவர்க ளுக்கு குளம், கிணறு. பள்ளிக்கூ டம், தெரு முதலியவைகளில் எவ்விதத் தடங்கலுமிருக்கக் கூடா தென்றும், ஒரு பொது உத்தரவு பிறப் பித்திருப்பதுடன், காஷ்மீர் சமஸ்தானத் தில் தீண்டாதார் என்ப வருக்கும் மற்ற வகுப்பாரைப் போலவே சமமான தகுந்த உத்தி யோகங்கள் கொடுக்கப்பட வேண் டுமென்றும் தீர்மானித்திருப்பது டன், அவர்கள் கல்வியில் பிற் போக்காய் இருப்பதை உத்தே சித்து எல்லாருக்கும் கல்வி ஏற்ப டும்படி செய்ய இதுவரை கல்விக்காக உபகாரச் சம்பளம் முத லியவைகள் கொடுத்து வந்ததை இவ்வருடம் இரட்டிப்பாக்கிக் கொடுத்து வருவதாகவும் எல்லா விதத்திலும் இதர பிரஜைகளுக்குச் சமமாகவே அவர்களை யும் பாவிக்க வேண்டுமென்றும் அர சாங்க அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்
இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட சீர்திருத்தவாதிகள் ஒவ்வொ ருவரும் ஆச்சரியத்தோடு மகிழ்ச்சியடைவார் கள் என்பதில் அய்யமில்லை. என்றாலும் இந்த உத்தர விலிருந்து நாம் அதிகமாக மகிழ்ச்சி அடைவது எதுபற்றி என் றால் தீண்டாதார் கல்வி அபிவிருத்தி உபகா ரத் தொகையை தாராளமாகக் கொடுத்து உதவியது பற்றியேயாகும்.
- குடிஅரசு 7.9.1930
No comments:
Post a Comment