தொழில் வரி
சென்னை உயர்நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தொழில் வரி வசூலிக்க வேண்டும் என தலைமைப் பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிர மணியம் கடிதம்.
பாதிப்பு
வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில் நுட்பப் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அரசாணை
ஒன்றிய அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழ் நாட்டிலும் ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப் புக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
உத்தரவு
அரசுப் பள்ளி மாணவர்கள் 60 சதவிகித மதிப் பெண் பெறும் வகையில் மாணவர்களின் தரத்தை ஆசிரியர்கள் மேம்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி செயலாளர் உத்தரவு.
அபராதம்
சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சன் பார்மா மருத்துவ ஆலை இயங்கி வருவதால் ரூ. 40 கோடி அபராதம் விதித்து தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு.
உயர்வு
நடப்பு நிதியாண்டின் 3ஆவது காலாண்டில் சிறு சேமிப்பு திடடங்களுக்கான வட்டியை 0.3 சதவீதம் வரை ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளது.
போலி பதிவு
மதுரை தொழிலதிபரின் இடத்தை போலி பத்திரப் பதிவு செய்த தென்காசி சார்பதிவாளர் உள்பட 4 பேர் கைது.
முடக்கம்
தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை மீறியதாக 67 ஆபாச இணைய தளங்களை முடக்குமாறு ஒன்றிய அரசின் தொலைத்தொடர்பு துறை உத்தரவை பிறப்பித்துள்ளது.
பட்டினி
நமது நாடு பட்டினி, வேலையின்மை, உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஏழை மக்கள் வாழும் பணக்கார நாடு என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து தெரிவித்துள்ளார்.
வலியுறுத்தல்
கள்ளக்காதலில் ஈடுபடும் ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment