டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக்கிற்கு சமூகப் பணிகளில் நம்பிக்கை நட்சத்திரம் என்று பாராட்டும் வகையில், புதிய தலைமுறை சார்பில் "தமிழன் விருது" வழங்கப் பட்டுள்ளது. இதை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து விருதினை காண்பித்தும், இரண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 4,000/- கொடுத்து மகிழ்ந்தார். உடன் டிசம்பர் 7 அமைப்பின் பொதுச் செயலாளர் அண்ணா மலை இருந்தார். (பெரியார் திடல், 22-09-2022).
திருச்சி தெற்கு தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் திருச்சி டி.குணா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து விடுதலை ஆண்டு சந்தா ரூ.2000, உண்மை ஆண்டு சந்தா ரூ.350 வழங்கினார். (22.09.2022, பெரியார் திடல்).
விடுதலை வேங்கைகள் கட்சியின் நிறுவனர் இரா.தமிழ் இன்பன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வீரமங்கை குயிலியின் 242ஆவது நினைவேந்தல் விழா அழைப்பிதழையும், விடுதலை வேங்கைகள் கட்சி தீர் மானங் களையும் வழங்கினார். உடன் விடுதலை வேங்கைகள் கட்சி யின் தோழர்கள். (22.09.2022 , பெரியார் திடல்).
No comments:
Post a Comment