மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திராவிடர்கழக அமைப்பாளர் ஞா.பிரான் சிஸ், திராவிடர்கழக தோழர்கள் செல்லையா, க.யுவான்ஸ் , ஹெரால்ட் வில்சன்
கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்து கொண்ட னர். மறைவுற்ற இங்கி லாந்து மகாராணி எலிச பெத் மற்றும் நாகர் கோவில் மதிமுக நிர்வாகி சிவராசன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரி வித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருடைய 144ஆவது பிறந்த நாளை குமரிமாவட்டத்தில் எழுச்சியுடன் கொண்டா டுவது எனவும், கழக தலைமைச் செயற்குழு கூட்டத் தீர்மானங்களை குமரிமாவட்டத்தில் செயல்படுத்துவது எனவும் , குமரிமாவட்டத் தில் பள்ளிகளில் நடந்த பெரியார் ஆயிரம் வினா விடைப் போட்டிக்கு ஒத்துழைத்த பள்ளி முதல் வர்கள் தலைமை ஆசிரி யர்கள், மற்றும் கழக தோழர்களுக்கு நன்றி தெரிவித்தும், விடுதலை நாளிதழ் மற்றும் இயக்க இதழ்களுக்கு அதிகமான சந்தாக்களை சேர்ப்பது எனவும் கூட்டத்தில் தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன கூட்டத்தில் கன் னியாகுமரி கழக கிளைக் கழக அமைப்பாளராக க.யுவான்ஸ் அறிவிக்கப் பட்டார்.
No comments:
Post a Comment