மதத்தின் மிருகக் குணம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 27, 2022

மதத்தின் மிருகக் குணம்!

சூடு வைத்து, சூனியக்காரி பட்டம்: மனிதக் கழிவுகளை உண்ண 4 பெண்களை கட்டாயப்படுத்திய கொடூரம்

ரய்ப்பூர், செப்.27 ஜார்க்கண்டில் 4 பெண்களை சூனியக்காரி பட்டம் சூட்டி, சூடு வைத்து, மனிதக் கழிவுகளை உண்ணக் கூறி கிராமவாசிகள் கட்டாயப்படுத்திய கொடூரம் நடந்துள்ளது. 

தும்கா, ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் சரையாஹாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் வசிக்கும் சிலர் ஒரு குடும்பத்தில் உள்ள 4 பெண்களை கொடுமைப்படுத்தி உள்ளனர். அவர்களை சூனியக்காரிகள் என பட்டம் சூட்டியுள்ளனர். இதன் பின்னர், இரும்பு தடியை சூடாக்கி, அதனை கொண்டு அவர்கள் உடலில் சூடு போட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் களை அதனுடன் விடாமல், மனித தன்மையற்ற செயலிலும் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் 4 பேரையும் மனிதக் கழிவுகளை உண்ணும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர். இந்த கொடூரநிகழ்வு பற்றி அறிந்த சரையாஹாத் காவல் நிலையத்தின் உயரதிகாரி வினய் குமார் தலைமையிலான காவல் துறை, நிகழ்வு  நடத்த பகுதிக்கு சென்று அந்த பெண்களை மீட்டு சமூக சுகாதார மய்யத்திற்கு சிகிச் சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களில் 2 பேர் வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி காவல்துறையினரிடம் அந்த பெண்களின் குடும்பத்தினர் கூறும்போது, ஜோதின் என்பவர் மற்ற கிராமவாசிகளான முனி சோரன், லக்கிராம் முர்மு, சுனில் முர்மு, உமேஷ் முர்மு மற்றும் மங்கள் முர்மு ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத் தினார். அதன்பின்பு, அவர் களை இதுபோன்று செய்யும்படி தூண்டி விட்டுள்ளார் என கூறி யுள்ளனர். இதனைத் தொடர்ந்து 6 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் முதல் தக வல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அவர்களை விரைவில் சிறையில் தள்ளுவோம் என்றும் உயரதிகாரி வினய் குமார் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment