அ.தி.மு.க.விடமிருந்து தி.மு.க. வசம் வந்த மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

அ.தி.மு.க.விடமிருந்து தி.மு.க. வசம் வந்த மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவி


தூத்துக்குடி, செப்.30  தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் களுக்கான தேர்தலும் நடத்தப்பட்டது. 17 உறுப்பினர்களை கொண்ட மாவட்ட பஞ்சாயத்தில் அ.தி.மு.க. 12 வார்டு உறுப்பினர்களையும், தி.மு.க. 5 வார்டு உறுப்பினர்களையும் பெற்றது. தொடர்ந்து நடந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த 5-ஆவது வார்டு உறுப்பினர் சத்யா தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். கடந்த 13ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்த தலைவர் சத்யாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறை வேறி யது.  இதில் மொத்தம் 17 உறுப்பினர்களில் 15 பேர் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட் டது.   தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்த சத்யா, தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக அரசிதழில்  வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே அ.தி.மு.க. கவுன்சிலர் பலர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால், அ.தி.மு.க வசம் இருந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி தி.மு.க. வசமாகிறது.


No comments:

Post a Comment