கழகத் தோழர்களுக்குரிய தொடர் பணி - எது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 1, 2022

கழகத் தோழர்களுக்குரிய தொடர் பணி - எது?

அரியலூர் இளைஞரணி மாநாட்டுப் பேரணி, உறுதிமொழி ஏற்பு காட்சிப் பதிவை முகநூலில் பார்த்து வியந்து ஒரு தோழர் தனது முகநூல் பக்கத்தில் பாராட்டி எழுதியிருந்தார். அது ஆசிரியர் அவர்களது பார்வைக்கு அனுப்பப்பட்டு 'விடுதலை'யில் வெளி வந்தது.

அவரது முகநூல் பக்க பின்னூட்டத்தில் விடுதலை சந்தா கேட்டேன்.  "நான் சிங்கப்பூரில் மகள் வீட்டில் உள்ளேன். 11.8.2022 அன்று ஊருக்கு வந்து தொடர்புகொள்கிறேன்" என்றார். அப்படியே தொடர்பு கொண்டார்.

"நான் கும்பகோணம், தாராசுரத்தைச் சேர்ந்தவன். ஊருக்கு வந்துவிட்டேன். 'விடுதலை' சந்தா எங்கு வந்து கொடுக்க வேண்டும்?" என்றார்  (நான் நம்பியூரில் ஆசிரியருடன் இருந்தேன்). 13.8.2022 ஆம் தேதி கும்பகோணம் தாராசுரம் நிம்மதி தாயார் படத்திறப்புக்கு ஆசிரியர் வருகிறார் நேரில் வந்து கொடுங்கள்" என்றேன்.

சரியாக மேடைக்கு வந்து தமிழர் தலைவர் ஆசிரியருக்குச் சால்வை அணிவித்து ஆண்டு சந்தா ரூ.2000 கொடுத்தார். அந்த சால்வையை திரும்ப அவருக்கு அணிவித்து "நீங்கள் எழுதியதைப் படித்தேன்  இன்னும் நல்லா எழுதுங்கள்" என்று ஆசிரியர் பாராட்டினார்.

 30-8-2022 அன்று அஞ்சலில் முதல் 'விடுதலை' அவருக்கு வந்துள்ளது அந்த 'விடுதலை'யை தனது முகநூலில் பதிவிட்டு "ஒரு விடுதலை ரூ.6 தான். இந்த காலகட்டத்தில் இது சாதாரண தொகைதான் தமிழினப் பெருமக்கள் அனைவரும் வாங்க வேண்டும்" என மகிழ்வுடன் பதிவிட்டுள்ளார்

இவரை ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை யார் என்று எனக்குத் தெரியாது  13-ஆம் தேதி ஆசிரியரை சந்திக்க வந்தபோதுதான் எனக்கும் தெரியும்

அவர்  வீ.பாஸ்கர், ம.தி.மு.க, தாராசுரம், கும்பகோணம் ஆவார்.

இவரைப் போன்ற நன்றியுள்ள,உணர்வுள்ளவர்கள் இருக்கும்வரை  'விடுதலை' வீறுகொண்டு எழும். தமிழர் தலைவர் ஆசிரியரின் உழைப்பால், அணுகு முறையால் எல்லாம் சாத்தியமாகும்.

இது போன்ற உணர்வாளர்களைத் தேடிக் கண்டு பிடிப்பது கழகத்தோழர்களின் தொடர்பணியாகட்டும்

- இரா.ஜெயக்குமார்

பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

No comments:

Post a Comment