திருச்சியில் உலகத் தமிழ் மாநாடு: தமிழ்நாடு அரசு முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 11, 2022

திருச்சியில் உலகத் தமிழ் மாநாடு: தமிழ்நாடு அரசு முடிவு

திருச்சி, செப். 11- திருச்சியில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் மிகப்பெரிய களமாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் விளங்குகின் றன. இந்த மாநாட்டை நடத்துவதை தமிழ்நாடு அரசுகள் பெரிய கவுரவ மாக கருதுகின்றன. தமிழ் மொழியின் வளர்ச்சிக் கான திட்டங்களை வகுக் கவும், உலகெங்கும் வாழும் தமிழறிஞர்களை ஒன்றி ணைக்கும் வகையிலும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று 1964-ஆம் ஆண்டு டில்லி யில் தொடங்கப்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தில் முடிவு செய் யப்பட்டது. 

அந்த வகையில் முதல் மாநாடு 1966-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் (மலே சியா) நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை (1968-ஆம் ஆண்டு), பாரிஸ் (1970), இலங்கை (1974), மதுரை (1981), கோலாலம்பூர் (1987), மொரிஷியஸ் (1989), தஞ்சாவூர் (1995), கோலாலம் பூர் (2015), சிகாகோ (2019) ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன. உலகத் தமிழ் செம்மொழி மாநாடு 2010ஆ-ம் ஆண்டு கோவை யில் நடைபெற்றது.

இந்த நிலையில் 12-ஆவது உலகத் தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள் முயற் சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட் டிற்கு திருச்சி மய்யப் பகுதி என்பதால் அதை அரசிடம் தமிழ் ஆர்வலர் கள் வலியுறுத்துகின்றனர். இந்த நிலையில் திருச்சி துவரம்குறிச்சி, முஸ்லிம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் எம்.ஏ.அலீம், "உங்கள் தொகுதியில் முதல்-அமைச் சர்" துறைக்கு கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி மனு அளித்திருந்தார். அதில், 12-ஆவது உலகத் தமிழ்ச் சங்க மாநாட்டை திருச்சி யில் நடத்த வேண்டும். அதற்கு அரசு ஒப்புக் கொள்ளுமா? என்று கேட்டிருந்தார். 

மேலும் அவர், இது வரை 11 உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்று உள்ளன. 11ஆ-வது மாநாடு சிகாகோவில் நடந்தது. இதுவரை திருச்சியில் உலகத் தமிழ் மாநாடு எதுவுமே நடத்தப்பட வில்லை. எனவே 12-ஆம் உலகத் தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்தும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன். அந்த மாநாட்டை, 'திரா விட கலாசாரம் மற்றும் அறிவியல் தமிழ்" என்ற தலைப்பில் நடத்த வேண் டும் என்றும் கூறியுள்ளார். 

அந்த மனுவுக்கு தற்போது தமிழ் வளர்ச்சி இயக்குநர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், திருச்சியில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவ தென்பது அரசின் கொள்கை முடிவாகும் என்றும் அதன் மூலம் மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள் ளது. அதன்படி அடுத்த உலகத் தமிழ் மாநாடு திருச்சியில் நடைபெறும் என்பது உறுதியாகி இருக் கிறது. அந்த மாநாடு நடை பெறும் தேதியை அரசு பின்னர் அறிவிக்கும்.

No comments:

Post a Comment