விசாரணைக்கு அழைப்பவர்களை துன்புறுத்தக் கூடாது : நீதிபதி உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 11, 2022

விசாரணைக்கு அழைப்பவர்களை துன்புறுத்தக் கூடாது : நீதிபதி உத்தரவு

சென்னை, செப். 11- திருப்பூர் மாவட் டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்ட தங்களை விசா ரணை என்ற பெயரில் அழைத்து சென்று காவல் துறையினர் துன்புறுத்து வதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரியிருந்தனர். 

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான அரசு தரப்பு வழக்குரைஞர், மனுதாரர்கள் மீது அளிக்கப்பட்ட புகார்  நிலுவையில் இருப்பதாகவும் அதுகுறித்த விசார ணைக்காகவே அழைத்த தாகவும் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், குற்ற வழக் குகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரி களுக்கு போதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக வும் விசாரணை நடை முறைகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத் துவதாகவும் அதற்கு தடை  விதிக்கக் கோரியும் பல மனுக்கள் தாக்கல் செய்யப் படுவதாக தெரிவித்துள்ள நீதிபதி, இது போன்ற சூழ லில் நீதிமன்றம் தலையிடும் என கூறியுள்ளார். குற்றம்சாட்டப்பட் டவர்களை விசாரணைக்கு அழைப்ப தற்காக வழிகாட்டு விதிகளை வகுத்தும் நீதிபதி இளந்திரையன் உத்தர விட் டுள்ளார். அதன்படி, விசாரணைக்கு ஆஜராகுமாறு எழுத்துப்பூர்வமாக மட்டுமே சம்மன் அனுப்ப வேண்டு மெனவும் அவ்வாறு அனுப்பும் போது ஆஜராக வேண்டிய நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் எனவும் விசாரணையின் போது நடக்கும் நிகழ்வுகளை முழுமையாக எழுத்து முறையில் குறிப்பெடுத்து வைக்க  வேண்டுமெனவும் உத்தர விட்டுள்ளார். மேலும் விசாரணைக்கு அழைப்பவர் களை துன்புறுத்தக் கூடாது  எனவும் உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment