திருச்சி, செப். 21- தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் பள்ளிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி யது.
இப்போட்டிகளில் ‘பி” மண்டல அளவிலான பல்வேறு பள்ளிகள் கலந்து கொண்டன. அதில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட் ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மண்டல அளவில் அய்ந்து முதலிடங்களையும். ஏழு இரண்டாமி டங்களையும், எட்டு மூன்றாம் இடங் களையும் பெற்று பள்ளிக்குப் பெருமை தேடித் தந்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம்
1. கே.கிஷோர்- ஒன்பதாம் வகுப்பு - வட்டெறிதல் போட்டி முதலிடம்
2. கே.வசீகரன் - ஒன்பதாம் வகுப்பு - 600 மீட்டர் ஓட்டப்பந்தயம் முதலிடம்.
3. என்.தர்ஷிணி - பன்னிரண்டாம் வகுப்பு - குச்சி தாண்டுதல் - முதலிடம்.
4. என்.ஜுபைல் அஹமது - பன்னி ரண்டாம் வகுப்பு -- குச்சி தாண்டுதல் - முதலிடம்.
5. ஆர். ஹரிஹரன் - பதினோராம் வகுப்பு -- குச்சி தாண்டுதல் - முதலிடம்.
6. ஆர்.சிறீஅபிராமி வர்தினி - பன்னிரண்டாம் வகுப்பு - குச்சி தாண்டு தல் - இரண்டாமிடம்
7. ஆர். ஜுனைத் அஹமது - பன்னிரண்டாம் வகுப்பு -- 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் -
இரண்டாம் இடம் மற்றும் 800 மீட்டர் - ஓட்டப்பந்தயத்தில் இரண்டா மிடம் பெற்றுள்ளார்.
8. ஜ.ஹாஜிரா பர்வீன் - பதினோ ராம் வகுப்பு குச்சி தாண்டுதல் போட் டியில் மூன்றாம் இடம்.
9. சி. ஷாரோன் ரூத் - பன்னி ரண்டாம் வகுப்பு குச்சி தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடம்.
10. ஆர்.ஹரிஹரன் பதினோராம் வகுப்பு 110 மீட்டர் தடை தாண்டுதலில் மூன்றாம் இடம்
11. என். ஷைபல் அஜ்மன் ஜெய் லானி ஒன்பதாம் வகுப்பு, ஆர். சந்தோஷ் - பன்னிரண்டாம் வகுப்பு ஆகியோர் 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடம்.
12. ஓ.எஸ். அப்துல் மாலிக் பதி னோராம் வகுப்பு குதித்தோடி தாண்டும் போட்டியில் மூன்றாம் இடமும், என்.ஷைபல் அஜ்மன் ஜெய்லானி ஒன்பதாதம் வகுப்பு 80 மீட்டர் தடை தாண்டுதலில் மூன்றாம் இடமும், ஆர். சந்தோஷ் - பன்னிரண்டாம் வகுப்பு 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மூன்றாம் இடமும் பெற்றனர்.
மேலும், நான்கு மாணவர்கள் 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றுள்ளனர். மேற்கண்ட மாணவர்கள் மாவட்ட அளவில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளி முதல்வர், இருபால் ஆசிரியர்கள், அலுவலகப்பணித் தோழர்கள் ஆகி யோர் பாராட்டி மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment