சென்னை, செப்.2 ‘கரீப் ரத்’ ரயில்களுக்கு புதிய எகானமி வகுப்பு பெட்டிகளை சென்னை அய்.சி.எப்-பில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது.
இதுகுறித்து அய்.சி.எப். அதிகாரிகள் கூறியதாவது: அய்.சி.எப்-பில் ‘கரீப் ரத்’ என்று அழைக்கப்படும் ‘ஏழைகள் ரதம்’ ரயில்களுக்கான ரயில் பெட்டி களைத் தயாரிக்கும் பணி தொடங்கிஉள்ளது. இந்த ரயில் தொடர்களில் அனைத்து ரயில் பெட்டிகளும் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட மூன்றடுக்கு ரயில் பெட்டிகளாக இருக்கும். குறைந்த கட்டணத்தில் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்ய வசதியாக இருக் கும். நடப்பு உற்பத்தி ஆண்டில் அதாவது, அடுத்த ஆண்டுமார்ச் மாதத்துக்குள் 723 குளிர்சாதன வசதி செய்யப்பட்ட எகானமி ரயில் பெட்டிகளைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
வழக்கமான மூன்றடுக்கு குளிர்சாதன வசதி ரயில் பெட்டி களில் 72 படுக்கைகள்தான் இருக் கும். ஆனால், இந்தப் பெட்டிகளில் 83 படுக்கைகள் இருக்கும்.
ரயில் பெட்டியில் உள்ள வசதிகள்
மூன்றடுக்கு குளிர்சாதன வசதி ரயில்களில் உள்ள பெட்டி களைப் போலஅல்லாமல், இந்த ரயில் பெட்டிகளில் ஒவ்வோர் படுக்கைக்கும் தனியாக குளிர் சாதன வசதி பொருத்தப்பட்டி ருக்கும். மேலும், ஒவ்வோர் படுக் கைக்கும் தனியாக 'மொபைல் சார்ஜிங்', படிப்பதற்கான விளக் குகள் மற்றும் அறிவிப்பு வசதி களும் இருக்கும். இதுதவிர, ஒவ்வொரு பெட்டியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட்டிருக் கும். படுக்கைகளுக்கு இடையே கூடுதல் இடவசதி இருக்கும். எகா னமி வகுப்பு பெட்டிகள் மூலமாக, அதிக அளவில் ரயில் பயணிகள் பயன டைவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தப் பெட் டிகள் முதல்முறையாக அய்.சி.எஃப்-பில் தயாரிக்கப்படுவது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment