நூல் பெயர்: ஐக்கிய நாடுகளின் வளம் குன்றா குறிக்கோள்கள் பார்வையில்
தி.மு.க. தேர்தல் அறிக்கை 2021
ஆசிரியர்: முனைவர் சுதாகர் பிச்சைமுத்து M.Sc., M.Phil., Ph.D., FRSC
பதிப்பகம்: நிகழ்மொழி பதிப்பகம்
அலைபேசி: 84284 55455
பக்கம். 80, விலை ரூ.100/-
முதல் பதிப்பு: 2022
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து எப்போதும் தமிழ்நாட்டு மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு உண்டு. ஏனெனில், பிற கட்சிகளை ஒப்பிடும் போது நீண்ட காலத் தொலைநோக்குடன் (க்ஷிவீsவீஷீஸீ) திட்டங் களை அறிவிப்பதில் வாக்காளர்கள் மத்தி யில் தி.மு.க. அறிக்கைக்குத் தனி மரியாதை உண்டு.
பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள் தலைமையேற்ற திராவிட முன்னேற்றக் கழக அரசு, சமத்துவம், தர்மம், சமூகநீதி இவற்றைத் தன்பாலும் தன் ஆட்சியின் அடிப்படையாகவும் கொண்டு தந்தை பெரியாரின் சிந்தனைகளைத் தனதாக்கிக் கொண்டு திராவிட முன்னேற்றக்கழகம் ஆரிய மாயையின், இருளைப் போக்கும் உதயசூரியனாய் திராவிட அரசினை அமைத் தது. கடந்த அய்ம்பது ஆண்டுகளில் தமிழ் நாடு அடைந்த அத்துணை வளர்ச்சிக்கும் நமது பேரறிஞர் அண்ணாவும் கலைஞரும் கொண்டு வந்த சீரும் சிறப்பான திட்டங் களே காரணம்.
2015-ஆம் ஆண்டு அய்க்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் வளர்ச்சிக் குறிக்கோள் என்று ஒரு 17 பகுதி களை அடையாளப்படுத்தியும் அவற்றை முன்னிலைப்படுத்தியும் திட்டங்கள், திட்ட வரைவுகள் என்று 2030-க்குள் எட்டப்பட வேண்டிய வேலைகளைச் செய்து வருகின்றன. உலகம் முழுவதும் பெண்கள் ஒரு சந்தைப் பொருளாகவே பார்க்கப்படும் நிலை இன்றும் தொடர்கிறது. இந்த நிலையை மாற்ற உலகின் வளர்ந்த நாடுகள் பெரும் முதலீட்டில் திட்டங்களை வகுத்துச் செயல்படுகின்றன.
அதேபோன்று தி.மு.க. அரசு கடந்த 50 ஆண்டுகளாக விடாமல், தொடர்ச்சியாக தேர்தல் அறிக்கைகளில் பெண்கள் முன் னேற்றம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு திட்டங்களையும் அறிவித்து, அந்த புரட்சிகரமான திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தது. அதன் அடுத் தடுத்த செயல் திட்டங்கள் எங்ஙனம் அய்க்கிய நாடுகளின் குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இருக் கின்றன என்பதை ஒப்புநோக்கிப் பார்த்து விளக்குவதே இந்த நூலின் நோக்கமாக அமைந்துள்ளது.
இந்தியாவின் மாநிலக் கட்சிகளில் மிகப் பெரிய கட்சியான திராவிட முன்னேற்றக் கழக அரசு 16ஆவது சட்டப்பேரவைத் தேர் தல்அறிக்கையினை ஓர் ஆய்வு நோக்கில் எடுத்துக்கொண்டு 16 கட்டுரைகளாக அமைத்து விளக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------
நூல் பெயர்: மெட்ராஸ் 1726
ஆசிரியர்: பெஞ்சமின் ஆல்ட்சே
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
பதிப்பு: க. சுபாஷிணி
முதல் பதிப்பு: 2021
பக்கம்: 266
சென்னை நகரம் பற்றிய எந்த ஒரு புதிய தகவலும் வரவேற்கப்பட வேண்டியதே ஆகும். சென்னையின் முழுமையான வரலாறு இன்னும் எழுதப்படவில்லை.
சென்னையைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய பல்வேறு மரபுகளின் அடையாளம் தாங்கி நிற்கும் கல்வெட்டுகள் உள்ள கோவில்கள், மற்றக் கட்டடங்கள் இன்னும் அலசி ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவில்லை. போர்த்துக்கீசிய கட்டடக்கலையின் முகப்போடு, உள்ள ஆறு கோவில்கள் இன்னும் பாதுகாப்போடு நிற்கின்றன.
ஆர்மேனியப் பெயர் கொண்ட கோவிலும் ஆர்மேனிய மொழியில் உள்ள கல்வெட்டுகளும் இன்னும் சென்னையில் இருக்கின்றன. அவை எல்லாம் சுபாஷிணி போன்ற ஆய்வாளர்களுக்கு அழைப்புச் சான்றுகளாகும்.
பெஞ்சமின் ஆல்ட்சே எழுதிய நூலை, சுபாஷிணி தமிழாக்கம் செய்துள்ளார். ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நூலைக் கண்டுபிடித்து அதை தமிழ் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். பல்வேறு வரலாற்றுக் குறிப்புகள் இதுவரையில் தொகுக்கப்படாத அரிய செய்திகள் அரிய தொகுப்பாகும்.
இந்த நூலினை தமிழ் கூறும் அறிவுலகம் வரவேற்றுப் பாராட்டுரைக்கும் - சென்னை நகர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளில் வெளிநாட்டார் பார்வையில் வெளிப்படும் கணிப்பும் மதிப்பீடும் உள்நாட்டார் கண்ணோட்டத்திலிருந்து வேறுபடுவதில்லை.
சென்னை வரலாற்றை மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கிறித்துவ ஏடுகள் பதிவு செய்துள்ளதையும் எடுத்துகாட்டும் சான்றுகள் முக்கியமானவையாகும்.
சென்னையின் வரலாற்றை அறிமுகப்படுத்தும் ‘மெட்ராஸ் டே’க்கு சிறப்புக்கு மேல் சிறப்பு செய்துள்ளது இந்த நூல்.
-----------------------------------------------------------------------------------------
நூல் பெயர்: பெரியாரின் பேரன்பு
ஆசிரியர்: ஞா. சிவகாமி
பதிப்பகம்: ஏகம் பதிப்பகம்
பக்கம்: 96, விலை: ரூ.100/-
முதல் பதிப்பு: 2021
“பெரியாரின் பேரன்பு’’ எனும் சுடர் விடும் அறிவு நூல் மூலம் கலங்கரை விளக்கம் போன்று தந்தை பெரியாரின் கருத்துகளை 13 உட்பிரிவுகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூல் ஆசிரியர்.
பெரியாரை வெறும் கடவுள் மறுப்பா ளர் என்று மட்டுமே குறை கூறி ஒதுக்கப் பார்க்கின்ற தன்னலவாதிகளை ஏற்காமல் தந்தை பெரியாரின் எழுத்து, இலக்கியம், மொழி, பெண்ணியம், ஜாதி- தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதி, சமுதாய மறுமலர்ச்சி, சமதர்ம நீதி, உள்பட பெரும் சமூக மேம்பாட்டுச் சாதனையான வற்றை இனம் காட்டி மெய்ப்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும், வால்டேர், ரூசோ, இங்கர்சால், சாக்ரட்டிஸ் போன்ற உலகச் சிந்தனை யாளர்களைச் சுட்டிக்காட்டி பெரியாரின் திறத்தை ஆராய்கிறார் திருமதி சிவகாமி அம்மையார் அவர்கள்.
‘பெரியாரே- வெருமானம்’ என்னும் கட்டுரையில் கல்வியும் சுயமரியாதையும் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது என்கிறார் பெரியார். சுயமரியாதை- அதா வது தன்மானம் மிகவும் மனிதனுக்குத் தேவை. சுயமரியாதையை ஆங்கிலத்தில் Self Respect எனச் சொல்வர். தன்மானத் தோடு வாழ்வதுதான் வாழ்க்கை. மனிதன் அடிபட்டாலும் காயம் ஆறிவிடும்.
ஆனால். தன்மானம் போனால் அவ மானம். இந்த அவமானம் மிகவும் வேத னையைத் தரும். சமுதாயத்தில் நீ கீழா வன்- நான் உயர்ந்தவன் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள இயலாதது. பெரியார் சொல்கிறார். “சூத்திரன் என்று சொன்னால் ஆத்திரம் கொள்’’ என்கிறார். 8 கட்டுரை களில் தமிழ்நாட்டில், பெண்ணுரிமைக் காக- ஏன், என் உரிமைக்காகப் பாடுபட்ட வர் பெரியார் என்று நூலாசிரியர் குறிப் பிடுகிறார்.
“ஆணுக்கு என்ன என்ன சுதந்திரம் உள்ளதோ அத்தனையும் பெண்ணுக்கும் வேண்டும் என்றவர் பெரியார். பெண் ணுக்குக் கல்வி கட்டாயம் வேண்டும் என்றார் பெரியார். பெண்களுக்கு சமை யல் வேலைதான் என்று இருந்த நிலை மையில் தன்னுடைய மனைவியையும், தங்கையையும் கள்ளுக்கடை போராட் டம் போன்ற போராட்டங்களில் முன் நிறுத்தினார். இதுதான் “பெரியாரின் பேரன்பு’’
இந்த மாற்றங்களைத் தம் அறிவிலும், வாழ்விலும் சுற்றுச் சுழலிலும் கண்டறிந்து நுட்பமாகப் படைத்துள்ள நூலாசிரியர் துணிவு, தெளிவு, கனிவு ஆகிய மூன்று தொகுப்புகளில் சிறப்பாக விளக்குகிறார்.
No comments:
Post a Comment