நாகையில் கோவிலுக்கு மூடுவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 12, 2022

நாகையில் கோவிலுக்கு மூடுவிழா

நாகப்பட்டினம்,செப்.12- நாகை அடுத்த அக்கரைப்பேட்டையில் பழைமையான, பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோலில் இரண் டாண்டுகளாக புனர மைப்பு பணிகள் நடந்து வருவதால், திரு விழா நடைபெறவில்லை.

இந்த ஆண்டு கிராம நிர்வாகத் தினர் இரு பிரிவாக செயல்பட்ட தால், இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடு உருவாகி, இரு தரப்பினரும் தனித் தனியாக கோவில் வேலைகளுக்கு ஏற்பாடு செய்தனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில், இரு தரப்பினரிடையே சுமூக தீர்வு ஏற் படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட் டன. 

மாவட்ட நிர்வாகம் முயற்சி பலனளிக்காததால், மாவட்ட ஆட் சியர் அருண் தம்புராஜ் உத்தரவுப்படி, கோவிலை நேற்று (11.9.2022) அதி காலை காவல்துறையினர் இழுத்து மூடினர்; ஏராளமான காவல்துறையினர் கோவில் முன் குவிக்கப்பட்டனர்.

வழக்கம்போல் காலை, 5:00 மணி முதல் பால்குடம் சுமந்து வந்த பக்தர்கள், கோவில் மூடப்பட்டிருந்த தால் அதிர்ச்சியடைந்து, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோவிலுக்குள் செல்ல முயன்றனர்.

இதனால், காவல்துறையினருக் கும், பக்தர்களுக்கும் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

ஏராளமான பெண்கள் கோவில் முன் சாமியாடி மயங்கியதால் பதற்றம் அதிகரித்தது.

வருவாய்த்துறை கோட்டாட்சியர் முருகேசன், காவல்துறை உதவி கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையிலான அதிகாரிகள், இரு தரப்பினரிடையே பேச்சு நடத்தினர். அய்ந்து மணி நேரத்திற்கு பின் தீர்வு எட்டப்பட்டு, கோவிலை காவல்துறையினர் திறந்து விட்டனர்.

அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவுவதால், பாதுகாப்புப் பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.


No comments:

Post a Comment