- ஒரு விளக்கம் -
இரண்டு நாள்களுக்கு முன் வந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாம் தலைமை நீதிபதி அமர்வு - பெண்கள் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அளித்துள்ள ஒரு தீர்ப்புப்பற்றி சில செய்தி ஊடகங் களிலும், சிலரது தவறான புரிதல் அறிக்கைகளாலும், ஏதோ தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான இட ஒதுக்கீடே செல்லாது என்று தீர்ப்பளித்ததுபோல ஒரு கருத்து பரப்பப்பட்டுள்ளது!
முழுத் தீர்ப்பினைப் படித்ததும் சில விளக்கங்கள் தெளிவாகியுள்ளன.
அடிப்படையில் செய்யப்பட்டுள்ள பெண்களுக் கான இட ஒதுக்கீட்டுக்கு இதனால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் போட்டியாளர் களிடையே திறந்த போட்டி என்ற திறமை அடிப் படையில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பாதிப்புக்கு ஆளாகி, அந்த இடங்களும் 30 சதவிகித மகளிர் இட ஒதுக்கீட்டுக்குமேல் பெற்றுள்ள ஒரு நிலைமையைச் சுட்டிக்காட்டி, இனிவரும் காலங்களில் - தேர்வுகளில், இந்த முறையில் நிகழ்ந்த குறைபாடுகள் திருத்தப்பட வேண்டும் என்றுதான் அத்தீர்ப்பு கூறியிருக்கிறது.
தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான இட ஒதுக்கீடே செல்லாது என்று கூறப்படவில்லை.
இட ஒதுக்கீடு அளித்த முறையில் ஏற்பட்ட குறைபாட்டை சீர்மை செய்யவே அத்தீர்ப்பு வலியுறுத்துகிறது.
(விரிவான விளக்க அறிக்கை பின்னர்).
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.9.2022
No comments:
Post a Comment