முல்லைப் பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 11, 2022

முல்லைப் பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி, செப்.11- பாசனத் திற்கு தண்ணீர் திறக்கப் பட்ட நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 70 அடியில் நீடித்து வருகிறது. 

பருவமழையால்  வைகை அணை அதன் முழுக்கொள்ளளவை எட்டியது. 71  அடி உயரம் கொண்ட அணையில் 70 அடிக் கும் மேல்  தண்ணீர் தேக்கப்பட்டு வரு கிறது. முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக் கப்படுவதாலும், மேற்குத் தொடர்ச்சி மலை, வெள்ளி மலை, வருசநாடு, கண்டமனூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையாலும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப் படுகிறது.  இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு 71 அடி வரை தண்ணீர் தேக்க பொதுப் பணித்துறையினர் முடிவு செய்தனர். அதன்  படி அணையை கண்காணித்து வருகின் றனர்.  

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங் களின் பாசனத்திற்காக அணை யிலிருந்து கூடு தல் தண்ணீர் திறக்கப் பட்டது. இருந்தபோதும் கடந்த சில நாட்க ளாக அணையின் நீர்மட்டம் 70.57 அடியில் நீடித்து வருகிறது. அணைக்கு 2426 கனஅடி நீர் வரு கிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் 3 மாவட்ட பாசனத்திற்காக 2091 கன அடிநீர் திறக்கப்படுகிறது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.85 அடியாக உள்ளது. 2869 கனஅடிநீர் வரு கிறது. 1867 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை 55 அடியிலேயே நீடித்து வரு கிறது. அணைக்கு வரும் 363 கனஅடி நீர் முழு வதும் உபரியாக வெளி யேற்றப்படுகிறது. சோத் துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.34 அடி யாக உள்ளது. 24 கன அடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. பெரியாறு 29.4, தேக்கடி 15, உத்தம பாளையம் 1 மி.மீ மழை யளவு பதிவாகி உள்ளது.


No comments:

Post a Comment