திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்த நாளான 17.09.2022 அன்று காலை 10 மணி யளவில் பெரியார் மருந்தியல் கல் லூரி வளாகத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியினை ஏற்றனர். சாமி கைவல்யம் முதியோர் இல்ல பெரியார் பெருந்தொண்டர்கள், நாகம்மையார் குழந்தைகள் இல்ல மாணவிகள், பெரியார் பெண்கள் விடுதி, மருந்தியல் கல்லூரி மாண வர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டா டப்பட்டது.
முன்னதாக சாமி கைவல்யம் முதியோர் இல்ல பெரியார் பெருந்தொண்டர்கள் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment