ரூ.8,400 கோடியில் ராமர் சிலை வைக்கும் உ.பி. அரசு
கபடி வீராங்கனைகளுக்கு ஆண்கள் கழிப்பறையில் வைத்து உணவு கொடுக்கிறது!
லக்னோ, செப்.21 உத்தரப்பிரதேச மாநிலம் சகரன் பூரில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் கபடி வீராங்கனைகளுக்கு ஆண் களின் கழிப்பறையில் வைத்து அங்கேயே சமைத்து உணவு பரிமாறப்பட்டது, ஆண்களின் கழிப்பறையில் வைத்து உணவு வழங்கப்படும் அவலம் ஒன்று காட்சிப் பதிவாக வெளியாகி உள்ளது.
சகரன்பூர் மாவட்டத்திலிருந்து 300-க்கும் மேற் பட்ட மாணவிகள் கபடி விளையாட்டுப் பயிற்சிக்காக அங்கு தங்கி உள்ளனர்.
கழிப்பறை வாளியில் குழம்பு
அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக சிறுநீர் கழிக்கும் இடத்தில் பேப்பர் விரித்து அதன் மீது பூரி யைக் கொட்டி வைத்துள்ளனர். அதே போல் கழிப் பறை வாசலில் பெரிய தாம்பாளத்தட்டில் சோற்றைக் கொட்டி வைத்துள்ளனர். கழிப்பறைக்குப் பயன் படுத்தப்படும் வாளியில் பருப்பு குழம்பு ஊற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்தக்காணொலி வெளியாகி யதால் மாவட்ட விளையாட்டுத்துறை ஆணையர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாள் களாகவே இப்படி நடப்பதாகவும், சாப்பிடும் அறை சேதமடைந்துள்ளதால் கழிப்பறையில் வைத்து சாப்பிடவேண்டும் என்று கூறியுள்ளார்களாம்.
சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே சில ஆண் பயிற்சியாளர்கள் கழிப்பறைக்கு சிறுநீர் கழிக்க வருவதும் பதிவாகி உள்ளது, அந்த இடத்திலேயே சிறுநீர் கழிக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே திறந்த நிலையில் பூரி பொரிக்கும் எண்ணெய் பாத்திரம் திறந்த நிலையில் இருப்பது காணொலியில் பதிவாகி யுள்ளது. நீண்ட நாள்களாகவே இந்த நிலைதான் என்றும், வெளியே கூறினால் இதுகூட கிடைக்காமல் போய்விடும் என்றும் வீராங்கனைகள் கூறியுள்ளனர். இந்நிலையில் ஒரு வீராங்கனை இதைப் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பான காட்சிப் பதிவு வெளியானதும் மாவட்ட விளையாட்டுத் துறை ஆணையர் அணி மேஷ் சக்சேனாவை உத்தரப்பிரதேச அரசு உடன டியாக தற்காலிக பணி இடைநீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து இடைநீக்கம் செய்யப்பட்ட விளை யாட்டுத் துறை ஆணையர்அணிமேஷ் சக்சேனா ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ‘‘சாப்பாடு மிகவும் தரமாக வழங்கப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் குறை இருக்கிறதா என்று பாருங்கள்; எந்த இடத்தில் இருந்து சாப்பிட்டால் என்ன? இதில் கூடவா அரசியல் செய்யவேண்டும். நான் என்மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டு தொடர்பாக முதலமைச்சரிடம் முறையீடு செய்யவுள்ளேன்'' என்று கூறியுள்ளார்.
விளையாட்டு வீராங்கனையின் கதறல்
இது தொடர்பாக ஒரு வீராங்கனை கூறும்போது. ‘‘நாங்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது சில பயிற்சியாளர்கள் கழிப்பறைக்குச் சென்றனர். மிகவும் நாற்றம் எடுத்தது. இருப்பினும் எங்களுக்கு வேறு வழியில்லை. விளையாடிவிட்டு பசியோடு வரும் நாங்கள், சாப்பிடாவிட்டால் மயக்கம் போட்டு விழுந்து செத்துவிடுவோம். ஆகையால் நாங்கள் சாப்பிட்டே ஆகவேண்டிய நிலை உள்ளது'' என்று கூறினார்.
No comments:
Post a Comment