இந்திய பாரம்பரிய உணவுகள் பல மருத்துவ குணங்கள் நிறைந் தவை. உணவே மருந்து என்ற நமது முன்னோரது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் பலவித உணவுகள் நமது உடல் நோய் களைத் தீர்க்க உதவுகின்றன. வெந்தயம் நமது அன்றாட உண வில் சேர்க்கப்படும் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த உணவுப்பொருள். இவற்றை உட் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்துப் பார்ப்போம்.
இன்றைய இளைஞர்கள் பலரது முக் கியப் பிரச்சினைகளுள் ஒன்று முடி உதிர்தல். வெந்தயத்திலுள்ள இயற்கை எண்ணெய் முடியின் வேர்க்கால்களுக்கு வலு சேர்ப்ப துடன் கருமை நிறத்தைத் தரு கிறது. இதனா லேயே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் வெந்த யம் பயன்படுகிறது.
வெந்தயம் மற்றும் மோர் உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கவல்லது. சிறுநீர் உற்பத்தியைப் பெருக்கும். மேலும் தோல் வறட்சி அடை யாமல் பாதுகாக்கும்.
No comments:
Post a Comment