கோவில் விழாவில் சிறுவன் பலி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 10, 2022

கோவில் விழாவில் சிறுவன் பலி!

திருச்சி, செப்.10 கோவில் விழாவின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். பெண்கள் உள்பட 3 பேர் காயமடைந்தனர். பெரம்பலூர் மாவட்டம் அரசலூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் காலை குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது வாண வெடி மற்றும் அதிர்வேட்டுகள் வெடிக்கப்பட்டது. 

இதில் வெடிகளில் ஒன்று சிதறி அங்கு கூடியிருந்த கூட்டத்திற்குள் புகுந்து வெடித்துச் சிதறியது. இதில் அந்தக் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் லலித்கிஷோர் (வயது 9) என்ற சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற் பட்டது. இதனால் சிறுவன் லலித்கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் இந்த வெடிவிபத்தில் ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த புனிதா (32), திருச்சி மாவட்டம், சிக்கத்தம்பூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (36), ஷோபனாபுரம் கிராமத்தை சேர்ந்த பிரியா (21) ஆகியோர் காயம் அடைந்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உரிமம் இல்லாமல் வெடி வெடித்த அதே ஊரைச் சேர்ந்த நீலகண்டன் (27), மணிகண் டன் (34) ஆகியோரை கைது செய்தனர்


No comments:

Post a Comment