நாசிக்கில் விச்சிராம் யாத வன் என்ற ஆதிதிராவிடச் சிறுவன் ஒருவன் தான் நகர சுத்தி தொழிலாளி வகுப்பில் இருப்பதால் அவ மானமும் வெறுப்பும் அடைந்து தற்கொலை செய்து கொண் டான். இதைப் பார்ப்பனர்கள் “அச்சிறு வன் மதம் மாறுவதற்கு இஷ்டப்ப டாமல் தற்கொலை செய்து கொண்டான்’’ என்று எழுதி திரித்துக் கூறி இப்போது இந்து மதத்திலிருந்து மதம் மாற வேண் டும் என்கிற உணர்ச்சி தாழ்த்தப்பட்ட மக்களுக்குள் ஏற்பட்டிருப்பதை அடக்க ஒரு சூழ்ச்சியாகக் கொண்டிருக்கிறார்கள் - இது அவர்களின் அயோக்கியத்தனத் தைக் காட்ட மற்றொரு உதாரணமாகும்.
விச்சிராம் யாதவன் என் கின்ற அந்த இளைஞனுக்கு வயது 18. அச்சிறு வயதி லேயே அவனுக்கு தோட்டி வேலை பிடிக்க வில்லை என்பது இயற்கையேயா கும். அதற்காக அவனுக்கு வேறு மார்க்க மும் இல்லை. ஜாதி இழிவும். ஜாதித் தொழில் கொடுமை யும் நீங்குவதற்காக அச்சமூகத் தலைவர்கள் செய்த முயற்சி கள் எல்லாம் வீணாயின. அது சம்பந்த மாய் இந்துத் தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் பொய்யாயின.
கடைசியாக அவர்கள் (இந்து தலை வர்கள்) தீண்டாதவர்கள் பேரால் பணம் வசூலித்து வயிறு வளர்க்க ஆரம்பித் திருப்பதையும், இனியும் பலர் அதை ஒரு ஜீவனோபாயமாகக் கொண்டு இருப்பதையும் பார்த்த பின்பு இனி இந்து மதத்தில் இருப்பது கூடாது என்று முடிவு செய்து கொண்டான்.
மதம் மாறுவதால் பயன் ஏற்ப டாது என்று இந்துமத விஷமக்காரர்களும், அயோக்கியர்களும் செய்த பிரச்சாரத் தையும் நம்பி விட்டான்.
ஆகவே இந்த இழிவிலிருந்து நீங்க வேண்டுமானால் செத்துப் போனால் தான் முடியும் என்று கருதி உயிரை விட்டு விட்டான்.
- குடிஅரசு, 22.3.1936
No comments:
Post a Comment