லக்னோ,செப்.10- உத்தரப்பிரதேசத்தில் கிஷான் சம்மான் எனப்படும் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ், பயனாளிகளில் தகுதியற்ற 21 லட்சம் பேருக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது.
ஒரு கோடி விவசாயிகளுக்கு ஆண் டுக்கு ரூ.6 ஆயிரத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தும் திட் டத்தை, பிரதமர் மோடி கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் தொடங்கி வைத்தார். அண்மையில் நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலிலும் இந்தத் திட் டத்தை முன்வைத்தே பாஜக வாக்கு களை அறுவடை செய்தது. இந்நிலை யில், உத்தரப்பிரதேசத்தில் சுமார் 21 லட்சம் தகுதியற்ற பயனாளிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாக உ.பி. பாஜக அரசே தற்போது ‘கண்டுபிடித்துக்’ கூறியுள்ளது.
இதுதொடர்பாக உ.பி. மாநில வேளாண் துறை அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் ரூ.6 ஆயிரத்தை மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஒன்றிய அரசு செலுத்தி வருகிறது. நாடு முழுவதும் 2.85 கோடி விவசாயிகள் இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைந்து வருகின்றனர். இதில் வருமான வரி செலுத்துபவர்களும், கணவன்-மனைவி என இருவரும் இந்த உதவித் தொகையைப் பெற்று வருவது தவறானதாகும். இதேபோன்று பல்வேறு வகையில் உத்தரப்பிரதேசத் தில் மட்டும் 21 லட்சம் தகுதியற்ற விவசாயிகள் உதவித் தொகையைப் பெற்று வருவது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட தொகை திருப்பி வசூ லிக்கப்படும். நில ஆவணங்கள் மற்றும் நேரில் ஆய்வுக்கு உள்படுத்தப் பட்ட விவரங்கள் ஆகியவற்றை இணையத் தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவசா யிகளுக்கு மட்டும் நிதி உதவி வழங்கப் படும். தகுதியற்றவர்கள் இந்தத் திட்டத் தின் பயனாளிகளாக இருப்பதாக புகார் வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு அமைச்சர் பேட்டியில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment