இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக அரசு புலனாய்வு அமைப்புகளை அரசியல் கருவிகளாக மாற்றியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொண்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவில் இணைந்த பிறகு சுத்தமான சான்றிதழ் பெற்றுள்ளனர் என்றார் தேஜஸ்வி. சிலர் அமைச்சர்களாகவும், சிலர் முதல மைச்சர்களாகவும் ஆனார்கள் என பீகார் துணை முதல மைச்சர் தேஜஸ்வி குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* அலகாபாத் உயர்நீதிமன்றம் 18 ஓபிசி துணை ஜாதிகளை எஸ்.சி. பிரிவினராக அறிவிக்கும் 3 உ.பி அரசின் உத்தரவுகளை ரத்து செய்தது. பட்டியலிடப்பட்ட ஜாதிகள் பட்டியலில் ஒரு ஜாதியைச் சேர்க்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு மட்டுமே உள்ளது என்று தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், 2016 முதல் 2019 வரை பிறப்பிக்கப்பட்ட மூன்று அரசு உத்தரவுகளை ரத்து செய்தது.
* பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பாட்னாவில் சந்திப்பு. மோடி அரசு வெறும் விளம்பரங்களை மட்டுமே செய்கிறது. மாநில உரிமைகளை நசுக்குகிறது என தலைவர்கள் சாடினர். பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வியும் உடன் இருந்தார்.
.- குடந்தை கருணா
No comments:
Post a Comment