கேள்வி: புதிதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் பாபர் மசூதி வழக்கு உள்பட 5 வழக்குகளை உடனடியாக முடிக்க கால நிர்ணயம் செய்துள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?
- முனிரத்தினம், மாமண்டூர்
பதில்: புறத்தோற்றத்தில் ஏற்கெனவே நிலுவை யில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் தோற்றம் ஏற்படுகிறது. அப்படி முடித்து வைக்கப் பட்டுள்ள பல வழக்குகளில் போதிய நியாயம் பாதிக்கப்பட்ட வர்களுக்குக் கிடைக்காமல், சிலர் காப்பாற்றப்பட்டு உள்ளனரோ என்ற சந்தேகமும் கூடவே தோன்று கிறது!
“சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வராக இருக்க வேண்டும்'' என்று நீதிபதிகள் பல தீர்ப்புகளில் கூறியது நினைவுக்கு வரக்கூடும்!
- - - - -
கேள்வி: ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்' நியமனம் குறித்து உயர்நீதிமன்றம் மீண்டும் மீண்டும் ஆகம விதிப்படி நடக்கும் கோயில்கள் என்று குறிப்பிடுவதன் சூட்சுமம் என்ன?
- கோபாலன், சி.பெ.கோயில்
பதில்: பார்ப்பனர் ஆதிக்கத்திலிருந்து கோயில்க ளின் பிடி நழுவி விடக் கூடாது; ஜாதி, பொருள் சுரண்டல் உள்பட பல ஆபாசங்களை அனுபவித்த சுகத்தை விட்டுக்கொடுக்க எளிதில் ஆதிக்கவாதி யினர் சம்மதிப்பரா!
இப்போது அதற்காகவே சட்டத்தை வளைத்து, கண்ணிவெடிகளைப் புதைத்து வைக்கின்றனர்!
- - - - -
கேள்வி: பள்ளிக் குழந்தைகளுக்கான பாடப் புத்தகங்களில் தொடர்ந்து ஹிந்துத்துவ புரட்டு களையும், மூடநம்பிக்கைகளையும் திணிப்பதைத் தடுக்க சட்டப்பூர்வ வழி இருக்கிறதா?
- சந்திரசேகர், கருங்குழி
பதில்: மாநிலக் கல்வித் திட்டப் பாடம் தான் நமக்கு என்பதையும், அந்த பாடத்தினை நடத்தும் பள்ளிகளுக்கு தனிச் சலுகையும், சிபிஎஸ்இ ஆதிக் கத்திற்கு முற்றுப்புள்ளியும் வைக்க தமிழ்நாடு அரசு யோசிக்க வேண்டும்.
- - - - -
கேள்வி: தமிழ்நாட்டில் உள்ள பல தனியார் பள்ளிகள் குழந்தைகள் அசைவ (மாமிச) உணவை மதிய உணவாக பள்ளிக்குள் கொண்டுவரக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதை எப்படி எதிர்கொள்வது?
- தேவிகா, வில்லிவாக்கம்
பதில்: எழுதி அனுப்புங்கள் - அரசின் கவனத் திற்கு. குறிப்பாக பள்ளிக் கல்வித் துறைக்கு. அரசு கல்விச் செயலாளருக்கு கொண்டு சென்று உரிய பரிகாரம் தேடவேண்டும்.
விளக்கமான ஆதாரபூர்வ தகவல்களை உடனே அனுப்பி வையுங்கள்.
- - - - -
கேள்வி: தமிழ்நாட்டில் ஹிந்துத்துவ சங்பரிவார் அமைப்புகளின் தவறான செயல்பாடுகளை தடுப்பதில் தமிழ் நாடு அரசு மெத்தனமாக செயல் படுகிறது என்ற ஒரு எண்ணப்போக்கு பொதுவாக நிலவுகிறதே, இது பற்றி தங்கள் கருத்து என்ன?
- கோவிந்தன், அச்சிறுபாக்கம்
பதில்: அதில் உண்மை இருப்பதாகத் தெரிய வில்லை. சில அதிகாரிகளின் போக்கு அத்தோற் றத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கலாம். அரசு மெத்தனம் காட்டாமல் வேகத்திலும், அதே நேரத்தில் விவேகத்திலும் நடக்கிறது!
- - - - -
கேள்வி: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம் பெற்றுள்ள மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகிய வார்த்தைகள் நீக்கப்பட வேண்டுமென சுப்பிரமணிய சாமி உச்சநீதிமன் றத்தில் மனு செய்துள்ளாரே...? இதில் அவருக்குள்ள உள்நோக்கம் என்ன?
- கு.செங்குட்டுவன், செம்பியம்
பதில்: ‘சு.சாமி இருக்கிறார்’ என்று காட்டிக் கொள்ள அவர் இப்படி பல உத்திகளைக் கையாளு கிறார். கடைசியில் அதே மாதிரி, “மூக்கறுப்பட்டாலும் முக்காடு போடாமலேயே ‘வீரனாக’” காட்டிக் கொள்வார்!
- - - - -
கேள்வி: மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது பதவிக் காலத்திற்குப் பிறகு வசிப்ப தற்காக ஒன்றிய அரசால் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்பு - மேனாள் ஒன்றிய அமைச்சர் மறைந்த ராம் விலாஸ் பஸ்வான் குடியிருந்த வீடு என்றும், தாழ்த்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்த ராம் விலாஸ் பஸ்வான் வசித்த வீட்டில் வேறு யாரும் தங்க மறுத்ததால் - தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு அந்த வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளாரே?
- மன்னை சித்து, மன்னார்குடி
பதில்: அரிய தகவல்; ஆராய வேண்டிய தகவல் - உண்மையானால் தலைகுனிய வேண்டிய நிலைமைதான்!
- - - - -
கேள்வி: அதிகாரப் பீடங்களில் உள்ள சனா தனிகளே, திருவாரூர் மாநாடு குறித்து அலறுவது ஏன்?
- க.ஆற்றலரசி, அயப்பாக்கம்
பதில்: பட்டுக்கோட்டை தளபதி அஞ்சாநெஞ்சன் அழகிரி மேடைகளில் கூறுவார்:
“ஈட்டி எட்டியவரை பாயும்
பணம் பாதாளம் வரை பாயும்
தந்தை பெரியார் கொள்கைகளோ
அண்டபிண்ட சராசரங்களிலும், அதற்கு
அப்பாலுக்கும் பாயும்'' என்பார்!
இதன் மூலம் அதன் பொருள் புரிகிறது!
- - - - -
கேள்வி: அமெரிக்காவில் கல்விக்கடன் ரத்து, மாணவிகளுக்கான நாப்கின் இலவசம், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனியில் பொதுப் போக்குவரத்து இலவசம் என்று மேலை நாடுகள் அறிவித்துள்ளன, ஆனால் மோடி இலவசங்கள் கொடுப்பதால் இந்திய பொருளாதாரம் சீரழிந்து போய்விடும் என்கிறாரே?
- மனோகர், மடிப்பாக்கம்
பதில்: இந்தியப் பொருளாதாரம் இப்போது என்ன நிலையில் உள்ளது?
1. இந்தியாவின் எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி ஜூன் மாதத்தில் 13.2 சதவிகிதமாக இருந்தது. ஜூலையில் 4.5. சதவிகிதம் வீழ்ச்சி,
2. வேலை வாய்ப்பு விகிதம் கடந்த 5 ஆண்டு காலத்தில் சரி பகுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
2017இல் 20.9 சதவிகிதமாக இருந்த 14 முதல் 25 வயதிற்கு உட்பட்டோர் வேலைவாய்ப்பு வளர்ச்சி யில் 10.4 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதுதான் “சப்கா சாத், சப்கா விகாஸ்” - பிரதமர் மோடி ஆட்சியின் சாதனை - இலவசத்தால் நடந்ததா இது?
- - - - -
கேள்வி: மேற்கு வங்கம், அசாம், திரிபுராவில் பிரதான எதிர்க்கட்சிகளைக் காலிசெய்து அந்த இடத்தை பாஜக நிரப்பி அசாமிலும், திரிபுராவிலும் ஆட்சியைப் பிடித்தனர்! அதே நிலைதான் தமிழ்நாட்டிலும் உருவாகிறது என்று அக்கறை உள்ளவர்கள் அச்சம் கொள்கிறார்களே?
- உமா சங்கர், பெங்களூரு
பதில்: தமிழ்நாடு ‘பெரியார் மண்'. இங்கு அந்த வித்தைகள் செல்லாது. என்றாலும் எப்போதும் விழிப்புணர்வு தேவை - ஏனெனில் எதிரிகள் எந்த கீழிறக்கத்திற்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment