கடவுள் சக்தி எங்கே? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 27, 2022

கடவுள் சக்தி எங்கே?

ஹிந்து பக்தர்கள் பரிதாப மரணம் : படகு கவிழ்ந்து 24 பேர் பலி

டாக்கா, செப்.27  வங்க தேசத்தில் உள்ள போதேஸ்வரி கோவி லுக்கு ஹிந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு வட மேற்கு வங்காளதேசத்தில் உள்ள கொரோட்டா ஆற்றில் கவிழ்ந்து விபத் துக்குள்ளானதில் பெண்கள் மற்றும் குழந் தைகள் உள்பட குறைந் தது 24 பேர் கொல்லப் பட்டனர், மேலும் ஒரு டஜனுக்கும் அதிகமா னோரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“படகு கவிழ்ந்த சம்பவத்தில் சுமார் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் எட்டுப் பேர்  குழந்தைகள் மற்றும் 12 பேர் பெண்கள்.  அவர்களில் சிலர் உள் ளூர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் இறந்துவிட்ட தாக அறிவிக்கப்பட்டனர், ”என்று பஞ்சகர்கின் போடா துணை மாவட் டத்தின் நிர்வாகத் தலை வர் சோலைமான் அலி செய்தியாளர்களிடம் கூறினார்.

காணாமல் போன வர்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் டைவர்ஸ் மூலம் தேடு தல்கள் நடைபெற்று வரு வதாகவும், பயணிகளின் எண்ணிக்கை 70 முதல் 80 வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

வங்கதேச குடி யரசுத்தலைவர் அப்துல் ஹமீதும், பிரதமர் ஷேக் ஹசீனாவும் நிகழ்விற்கு   இரங்கல் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

வங்கதேசம்  முழுவதும் கங்கை உள்ளிட்ட துணை ஆறுகளின் கழிமுகமாத லால் - _ நாடு முழுவதும் பல்வேறு ஆறுகள் ஓடு கின்றன.  படகு மற்றும் படகு விபத்துகளில் ஒவ் வொரு ஆண்டும் நூற் றுக்கணக்கான மக்கள் இறக் கின்றனர், மே மாதம், அதிக நெரிசல் மிக்க  படகு, மணல் ஏற் றப்பட்ட படகில் மோதி பத்மா நதியில் மூழ்கியதில் 26 பேர் இறந்தனர்.


No comments:

Post a Comment