இதுதான் பார்ப்பனீயம்!, பால்யத் திருமணமாம், சிதம்பரம் தீட்சிதர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 23, 2022

இதுதான் பார்ப்பனீயம்!, பால்யத் திருமணமாம், சிதம்பரம் தீட்சிதர் கைது

சிதம்பரம்,செப். 23 14 வயது மகளுக்கு திரு மணம் செய்து வைத்த சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர், திருமணம் செய்த தீட்சிதர் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிதம்பரம் தீட்சிதர்கள் அதாவது தில்லை தீட்சிதர்கள் தனித்துவமானவர்கள் என தங்களைத் தாங்களே கூறிக்கொள்கின்றனர் இவர்கள் நேராக கயிலாயத்தில் இருந்து சிவ பெருமானோடு சிதம்பரத்துக்கு வந்தார் களாம்.

விவாதப் பொருளாகத் தொடரும் தீட்சிதர்களின் வாழ்வியல் 

தீட்சிதர்களைப் பொறுத்தவரை மொத் தமே 4 கோத்திரங்கள் எனப்படும் உட்பிரி வினர்தான். சிறிவத்ஸ கோத்திரம், கவுண் டின்ய கோத்திரம், ரிசிக்யான்யர் கோத்திரம், விஸ்வாமித்திர கோத்திரம் ஆகிய உட் பிரிவுகள்தான் தீட்சிதர்களுக்குள் உண்டு. மற்றவர்களைப் போல அத்தை- மாமன் முறை என்றெல்லாம் திருமணத்தில் கடைப் பிடிப்பதும் இல்லை, அண்ணன்- தங்கை முறையிலும் திருமணம் செய்வார்கள். தீட்சிதர்கள் தங்களது குடும்பங்களுக்குள் மட்டும் திருமணம் செய்து கொள்வது வழக்க மாகும். குழந்தைத் திருமணம் என்பதெல்லாம் தடை செய்யப்பட்டுள்ளதைப் பொருட்படுத்த வும் அவர்கள் தயாராக இல்லை. 

சிதம்பரம் தீட்சிதர்களின் வாழ்வியல் முறை குறித்த சர்ச்சைகள் விவாதப் பொரு ளாகவே தொடர்ந்து வருகின்றன. சிதம்பரம் நடராஜர் கோவிலை முன்வைத்து தீட்சிதர்கள் மீது ஏராளமான புகார்களும் உள்ளன. இந்த பின்னணியில்தான் சிதம்பரத்தில் கடந்த ஆண்டு நடந்த குழந்தைத் திருமணம் பெரும் சர்ச்சையானது.சிதம்பரம் நடராஜர் கோவி லைச் சேர்ந்த சோமசேகர தீட்சிதர் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தனது 14 வயது மகளுக்குத் திருமணம் செய்து வைத்தார். 

இது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. தற்போது இந்த குழந்தைத் திருமணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் ஒப்புதல் வாக்குமூலம்,..

இந்த விசாரணையில் சிறுமியின் தந்தையான சோமசேகர தீட்சிதர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் சிறுமியைத் திருமணம் செய்த நபர் தப்பி ஓடி தலை மறைவாகிவிட்டார். இது தொடர்பாக தப்பி ஓடிய நபரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் தப்பி ஓடிய திருமணம் செய்த பசுபதி தீட்சிதரும் பிடிபட்டுள்ளார். மேலும் எனது பெற்றோர் மிகவும் நெருங்கிய உறவு முறையுள்ளவருக்கு தன்னைத் திருமணம் செய்து வைத்தனர் என அந்தச்சிறுமியும் காவல்துறையிடம் தெரி வித்துவிட்டார்.  

தற்போது பிடிபட்டுள்ள 24 வயது தீட்சிதர் மற்றும் அவரது உறவினர்கள் பலரிடமும் சிதம்பரம் காவல்துறையினர் தீவிரவிசாரணை செய்து வருகின்றனர். 

No comments:

Post a Comment