சிவமோகா, செப்.11 கருநாடக மாநிலத்தில் ஹிந்துத்துவ அமைப்பு களின் வெறியாட்டம் அளவுக்கு மீறிப் போய்க் கொண்டு இருக்கிறது, இஸ் லாமியர்கள் வீடுகளில் காவிக் கொடி ஏற்றுவது இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் ஹிந்துக் கடவுள் படங்களை வைப்பது போன்றவைகளைச் செய்த ஹிந்துத்துவ அமைப்பினர் இப்போது இந்திய தேசியச்சின்னத்தின் மீதே காவிக்கொடியை கட்டிவிட்டார்கள்.
கருநாடக மாநில சிவமோகா மாவட் டத்தில் பிள்ளையார் சதுர்த்தி முடிந்து பிள்ளையார் சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்துச்சென்றனர் ஹிந் துத்துவ அமைப்பினர். நகரின் எல்லாப் பகுதிகளிலும் காவிக்கொடி காவி வண்ண பெரிய திரைச் சீலைகளை இஸ்லாமியர் வீடுகளிலும் வழிபாட்டுத் தலங்களிலும் கட்டி எதிர்ப்போரை மிரட்டியும் அடித்து விரட்னர். காவல் துறை வழக்கம்போல் எந்த நடவடிக் கையும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பது தொடர்கிறது.
இந்த நிலையில் சிவமோகா நகரின் முக்கிய பகுதியில் உள்ள இந்திய தேசிய நினைவுத்தூனான அசோகர் தூணின் மேலேயும் காவிக்கொடியைப் பறக்க விட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் புகார் அளித்தும் காவல்துறை நட வடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது, இணையத்தில் தேசிய நினைவுச்சின்னத்தின் மீது ஏற்றப்பட்ட காவிக்கொடி படம் பரவிவருகிறது இதனைப் பார்த்தவர்கள் கருநாடக அரசுக்கும் காவல்துறைக்கும் கண்ட னத்தை தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment