சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட ஒன்றிய அமைச்சரின் பங்களா இடிப்பு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 21, 2022

சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட ஒன்றிய அமைச்சரின் பங்களா இடிப்பு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

மும்பை, செப்.21 ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே, விதிகளுக்கு மாறாக கட்டிய பங்களாவை இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூஹூ கடற்கரை அருகே ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே, விதிகளுக்கு மாறாக கட்டிய பங்களாவை இடிக்க உத்தரவிட்ட மும்பை உயர்நீதிமன்றம், அவருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஒன்றிய சிறு குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சராக உள்ள நாராயண் ரானேவுக்கு, ஜூஹூ கடற்கரையில் பங்களா உள்ளது. மும்பை கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கடலோர ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி இன்றி அக்கட்டடங்கள் கட்டப் பட்டதாக புகார் எழுந்தது.

அந்த பங்களாவை ஒழுங்குபடுத்தக் கோரி, ஒன்றிய அமைச்சர்  நாராயண் ரானேவின் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் மாநகராட்சியிடம் மனு அளிக் கப்பட்டது. அதனை மாநகராட்சி நிரா கரித்துவிட்டது. இதனை அடுத்து இரண் டாவது முறையாக மனு அளிக்கப்பட்டது. 

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதி மன்ற நீதிபதிகள் தனுகா மற்றும் கமல் கட்டா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:

ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு சொந்தமான நிறுவனம் அளித்த மனுவை பரிசீலனை செய்ய மாநகராட்சியை அனு மதிக்க முடியாது. இது, அங்குள்ள ஒட்டு மொத்த விதிமீறல் கட்டுமானத்தையும் அங்கீகரிக்க வழி ஏற்படுத்தி விடும்.

விதிமீறி கட்டப்பட்ட பங்களாவை இரண்டு வாரங்களுக்குள் இடித்து விட்டு, அதற்கு அடுத்த ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நாராயண் ரானேவுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதனை, மகாராட்டிர மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட் டனர்.

ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யுள்ள தால், 6 வாரங்களுக்கு உத்தரவை நிறுத்தி வைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்க மும்பை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

No comments:

Post a Comment