மழை வெள்ளத்தில் தவிக்கும் கருநாடகா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 9, 2022

மழை வெள்ளத்தில் தவிக்கும் கருநாடகா!

தமிழ்நாட்டு முதலமைச்சர் போல் மழை வெள்ளத்தை சமாளிக்கவேண்டும்

கருநாடக பிரபலங்கள் கருத்து

பெங்களூரு, செப்.9 கருநாடக மாநிலம் பெங்களூருவில் செப்டம்பர் முதல்வாரத் தில் பெய்த மழையால் நகரமே இத்தாலி நாட்டின் வெனீஸ் நகரம் போல் மாறியது.

கிட்டத்தட்ட ஒட்டுமொத்த பெங் களூரு நகரசாலைகளில் மழைநீர் முழங் கால் அளவு தேங்கி நின்றது.   விலை உயர்ந்த காரிலும், நவீன வசதிகள் கொண்ட சொகுசு பேருந்திலும் வேலைக் குச்சென்ற மென்பொருள் தொழில் நுட்ப ஊழியர்கள் டிராக்டரிலும், ஜே.சி.பி வாக னத்திலும், லாரி உள்ளிட்ட சரக்கு வாக னங்களிலும் தலைக்கு ரூ.100 கொடுத்து வேலைக்கு போகவேண்டிய அவலம் ஏற்பட்டது.

கருநாடக முதலமைச்சர், 

பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் எங்கே? 

 இத்தகைய கடுமையான மழைநீர் பாதிப்பிலும் பெங்களூரு பா.ஜ.க நாடா ளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூரியா, கருநாடக முதலமைச்சர் பொம்மை, நகர நிர்வாகத்துறை அமைச்சர் என யாருமே பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறு தல் கூறுவதற்குக்கூட வரவில்லை. உண விற்கு வழியில்லாதவர்களுக்கு மாநகரில் உள்ள கிறிஸ்தவ கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் தங்க இடம் மற்றும் உணவும் கொடுத்து பாதுகாத்தனர். 

பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினரின் 

அர்த்தமற்ற பதிவுகள் 

மழைவெள்ள பாதிப்பு தொடர்பாக பெங்களூரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்ட போது, 

‘‘முழு பெங்களூருவும் பாதிக்கப்பட வில்லை. ஒரு சில பகுதிகள் மட்டுமே பாதிக்கப்பட்டன. அந்த இடங்கள் பாதிக் கப்பட முந்தைய காங்கிரஸ் அரசுதான் காரணம். இதில் அரசியல் செய்யவேண் டாம், விநாயகர் சதுர்த்தி விழா நடந்து கொண்டு இருக்கிறது, அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்” என்று பேட்டியளித்தார்.

 மேலும் ஒரு தனியார் உணவு விடுதியில் அமர்ந்துகொண்டு ”இங்கே தோசை நன்றாக சுவையாக இருக்கிறது, பெங்களூரு மக்கள் கட்டாயம் இந்த ஓட்டலுக்கு வந்து தோசையை ருசித்துப் பாருங்கள்” என்று பதிவிட்டார். பா.ஜ.க. வைச்சேர்ந்த பெங்களூரு நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூரியாவின் இந்தப் பேட்டி பெங்களூரு மக்களை கொதிப் படையச் செய்துவிட்டது. 

 அனைவரும் சமூகவலைதளங்களில் கருநாடக பா.ஜ.க அரசையும், நாடாளு மன்ற உறுப்பினரையும் வசைபாடிக் கொண்டு இருக்கின்றனர்.   பெங்களூரு வெள்ளம் தொடர்பாக ஆளும் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர் பொம்மை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அங்குள்ள பெரும்பாலான சமூக ஆர் வலர்கள் ”கருநாடக ஆளும் கட்சியினரே,  தமிழ்நாட்டு முதலமைச்சரைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறிவரு கின்றனர்.

ஷ்ராவன் என்ற சமூக ஆர்வலர்  கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் சிக்கிய போது தமிழ்நாடு முதலமைச்சர் நாள் தோறும் வெள்ள பாதிப்பிற்கு உள்ளான  இடங்களுக்குச் சென்று வெள்ள நீரை வெளியேற்றுவது, மேலும் எதிர்காலத்தில் பாதிப்பில்லாமல் மக்களைக் காப்பது போன்ற அறிவுரை ஆலோசனைகளை வழங்கினார்.

 மேலும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறும் கருத்துகளையும் உள்வாங்கி விரைவாக பணி முடிக்கவும், வெள்ளநீர் வடிகால் பணிகளை மேற் கொள்ளவும் ஆலோசனைகளை வழங் கியபோது எடுக்கப்பட்ட 10.11.2021 அன்றைய காணொலியைப் பகிர்ந்து 

I remember Honorable 

@mkstalin

 at this difficult times in #Bangalore 

Last year, when there was floods due to heavy rain, he managed successfully &  made sure that no one in Chennai is affected.

Food, shelter and basic needs were taken care.

We are missing such a CM 

 நாங்கள் அற்புதமாக தமிழ்நாட்டு முதலமைச்சரை நினைவு கூருகிறோம். கடந்த ஆண்டு தமிழ்நாடு தலைநகர் சென்னை மழைக்காலத்தின் போது பாதிக்கப்பட்டது, அப்போது மக்களோடு மக்களாக நின்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொழிலாளர்களு டன் கலந்து உரையாடி வெள்ள நிவா ரணப் பணிகளை முடிக்க ஊக்கம் கொடுத்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகளைக் கொண்டு சேர ஆணையிட்டார்.

முதலமைச்சர் எந்தப் பகுதிக்கு, எப் போது வந்து ஆய்வு செய்வார் என்று முன்கூட்டியே அறியாத நிலையில் சென்னையில் அனைத்துப்பகுதிகளிலும் அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வெள்ள நிவாரணப் பணிகளை அதி விரைவாக நடத்தி முந்தைய மழை வெள்ள பாதிப்புபோல் இல்லாமல் சென் னையை மீட்டனர். 

 அந்த முதலமைச்சரை இன்று நினைவு கூருகிறோம்” என்று பதிவிட்டு  ‘‘உங்களைப் போன்ற ஒரு முதல மைச்சரை நாங்கள் பெறமாட்டோமா என்று ஏங்குகிறோம்” என பதிவிட் டிருந்தார். இது போல் ஆயிரக்கணக்கான பதிவுகள் கருநாடக மண்ணில் இருந்து வெளி வந்துகொண்டுள்ளன.

பெங்களூரு மக்களின் ஏக்கம்

 தமிழ்நாடு என்றாலே காவிரிப்பிரிச்சினையில் ‘நமக்கு எதிரிகள்’ என்று நினைத்து கோடை காலத்தில் காவிரிப் பிரச்சினையைக் கொண்டு வன்முறையைத் தூண்டி விடும் நிலையில் இருந்த கருநாடக பிரமுகர்கள் தற்போது எந்த தமிழ்நாட்டை- தமிழர்களைத் தூற்றினார்களோ இன்று அதே தமிழ்நாட்டின் முதலமைச்சரைப் போன்ற வர் தங்களுக்கு முதலமைச்சராக வரமாட்டாரா என்று ஏக்கத்தை சமூக வலைதளம் வாயிலாகப் பதிவிட்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment