சென்னை,செப்.9- சென்னை - கன்னியாகுமரி சாலையை 8 வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என்று பெங்களூருவில் நடைபெற்ற அனைத்து மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச் சர்கள் மாநாட்டில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச் சர் எ.வ.வேலு வலியுறுத்தினார்.
ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடை பெற்ற இந்த மாநாட்டில், தமிழ் நாடு அமைச்சர் எ.வ.வேலு பேசி யதாவது: சென்னைதுறைமுகம் - மதுரவாயல் இரண்டுஅடுக்கு உயர்நிலை மேம்பாலத்துக்கு கடந்த மே 26ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைத்தார்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறைசுமார் 64,000 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளைப் பராமரித்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் சாலை வசதி களை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது.
முக்கியமான மாநில நெடுஞ்சாலைகள் 2026ஆம் ஆண்டுக் குள், முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்படும். இதில் 2,200 கி.மீ. தொலைவுக்கு 4 வழிச் சாலையாகவும், 6,700கி.மீ. தொலைவுக்கு இரண்டு வழிச் சாலையாகவும் விரிவுபடுத்தப் படும். மேலும், தற்போதுள்ள 1,280தரைப்பாலங்கள் 2026ஆம் ஆண்டுக்குள் உயர்மட்டப் பாலங்களாக மாற்றப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, நகராட்சிகளுக்கு புற வழிச்சாலை அமைக்கப்படு கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 10,000 கி.மீ. ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் 5 ஆண்டு களில், மாவட்ட சாலைகள் தரத்துக்கு மேம்படுத்தப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்புப்படி, சாலைப் பாது காப்பு செயலாக்கத்துக்காக சிறப்புப் பணிக் குழு அமைக் கப்பட்டுள்ளது. மேலும், முத லமைச்சர் வழிகாட்டுதல்படி, விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்க சாலைப் பாதுகாப்பு பொறியியல் தொடர்பான சிறப்புதொடர் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டு, 335 பொறி யாளர்கள் பயிற்சி பெற்றுள் ளனர்.
அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்காணிக்க கிழக்கு கடற்கரைச் சாலையில், தானியங்கி வேக அமலாக்க அமைப்பு மற்றும் மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் சில திட்டங் களை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். சென்னை- கன்னியாகுமரி சாலையை 6 அல்லது8 வழிச்சாலையாக விரிவுபடுத்துவது அவசியமாகும்.
மேலும், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் மற்றும் தஞ்சாவூர் பெரியகோயில் ஆகியவற்றின் முக்கியத்துவத் தைக் கருத்தில்கொண்டு, தேசிய நெடுஞ்சாலைக்கான இணைப்புச் சாலைகளை மேம் படுத்த சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். அதேபோல, மாநிலச் சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் சந்திப்புகளை மேம் படுத்த சிறப்பு நிதியை அனு மதிக்கவேண்டும். சில பகுதிகளில் மக்களின் கோரிக்கையை ஏற்று, சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
No comments:
Post a Comment